/
உள்ளூர் செய்திகள்
/
காஞ்சிபுரம்
/
இரட்டைதாலீஸ்வரர் கோவிலில் பிரதோஷம்
/
இரட்டைதாலீஸ்வரர் கோவிலில் பிரதோஷம்
ADDED : நவ 28, 2024 08:37 PM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
உத்திரமேரூர்:உத்திரமேரூரில், பேருந்து நிலையம் அருகே, இரட்டைதாலீஸ்வரர் கோவில் உள்ளது. இந்த கோவிலில், நேற்று பிரதோஷ வழிபாடு நடந்தது. முன்னதாக, காலை 10:00 மணிக்கு, மூலவருக்கு நெய், பால், இளநீர், சந்தனம், பஞ்சாமிர்தம் ஆகியவற்றால், சிறப்பு அபிஷேகம் செய்யப்பட்டது.
மாலை 6:00 மணிக்கு, இரட்டைதாலீஸ்வரருக்கு சிறப்பு பூஜைகள் செய்து, பிரதோஷ வழிபாடு நடந்தது. பின், உற்சவ மூர்த்தி, கோவில் வளாகத்தில் வலம் வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தார். கோவில் அறங்காவலர் குழுத் தலைவர் ஞானமணி உட்பட பலர் பங்கேற்றனர்.

