/
உள்ளூர் செய்திகள்
/
காஞ்சிபுரம்
/
குளக்கரை சுற்றுச்சுவர் சீரமைப்பு
/
குளக்கரை சுற்றுச்சுவர் சீரமைப்பு
ADDED : நவ 27, 2025 04:45 AM

காஞ்சிபுரம்: நம் நாளிதழில் வெளியான செய்தியை தொடர்ந்து, இடிந்து விழும் நிலையில் இருந்த காஞ்சிபுரம் சர்வதீர்த்த குளத்தின் சுற்றுச்சுவரை, ஏகாம்பரநாதர் கோவில் நிர்வாகம் சீரமைத்துள்ளது.
காஞ்சிபுரம் சர்வதீர்த்த குளம், ஹிந்து சமய அறநிலையத் துறை கட்டுப்பாட்டில் உள்ளது. ஏகாம்பரநாதர் கோவில் நிர்வாகம் சார்பில் பராமரிக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில், குளத்தின் வடகிழக்கு பகுதியில், சாலையோரம் உள்ள சுற்றுச்சுவரின் ஒரு பகுதியில் விரிசல் ஏற்பட்டு, இடிந்து விழும் நிலையில் இருந்தது. இதனால் ஏற்படும் பாதிப்புகள் குறித்து, நம் நாளிதழில் செய்தி வெளியானது.
இதை தொடர்ந்து, காஞ்சிபுரம் ஏகாம்பரநாதர் கோவில் நிர்வாகம் சார்பில், சர்வதீர்த்த குளத்தின் சுற்றுச்சுவர் சீரமைக்கப்பட்டது.

