/
உள்ளூர் செய்திகள்
/
காஞ்சிபுரம்
/
கத்தியுடன் பள்ளியில் நுழைந்து வாலிபரை வெட்டியதால் பீதி
/
கத்தியுடன் பள்ளியில் நுழைந்து வாலிபரை வெட்டியதால் பீதி
கத்தியுடன் பள்ளியில் நுழைந்து வாலிபரை வெட்டியதால் பீதி
கத்தியுடன் பள்ளியில் நுழைந்து வாலிபரை வெட்டியதால் பீதி
ADDED : பிப் 08, 2024 12:54 AM
சென்னை:திருவொற்றியூர், பூங்காவனபுரத்தைச் சேர்ந்தவர் ரஞ்சித், 33. இவர் மீது, திருவொற்றியூர் காவல் நிலையத்தில், நான்கு வழக்குகள் உள்ளன. இவரது மகள், ராஜாகடை தனியார் பள்ளியில் படிக்கிறார்.
நேற்று மாலை, மகளை அழைத்து வருவதற்காக பள்ளிக்கூட வாசலில் காத்திருந்தார். அப்போது, அவரை பின் தொடர்ந்து வந்த நான்கு பேர் கும்பல், பட்டாக் கத்தியால் அவரை சரமாரியாக தாக்கியுள்ளனர்.
பயந்து போன ரஞ்சித், பள்ளியினுள் ஓடியுள்ளார். அவரை விரட்டிச் சென்ற மர்ம கும்பல், பள்ளி வளாகத்தில் வைத்து வெட்டிக் கொல்ல முயன்றுள்ளனர். இதனால், பள்ளி வளாகத்தில் இருந்த, மாணவர்கள் - ஆசிரியர்கள், பெற்றோர் கடும் அதிர்ச்சியடைந்தனர்.
பின், மர்ம கும்பல் தப்பியோடியது. இரு கைகளிலும், வெட்டுக்காயமடைந்த ரஞ்சித்தை மீட்டு, திருவொற்றியூர் தனியார் மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர்.
அங்கு, அவர் சிகிச்சை பெற்று வருகிறார். சம்பவம் குறித்து, திருவொற்றியூர் போலீசார் வழக்கு பதிவு செய்து, கொலை வெறி தாக்குதலில் ஈடுபட்ட மர்ம கும்பலை, தீவிரமாக தேடி வருகின்றனர்.
பள்ளி வளாகத்தில் நடந்த, கொலை வெறி தாக்குதல் சம்பவத்தால், அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

