/
உள்ளூர் செய்திகள்
/
காஞ்சிபுரம்
/
பல்லவர்மேடு தீப்பாஞ்சியம்மன் புதிய சிம்ம வாகனத்தில் உலா
/
பல்லவர்மேடு தீப்பாஞ்சியம்மன் புதிய சிம்ம வாகனத்தில் உலா
பல்லவர்மேடு தீப்பாஞ்சியம்மன் புதிய சிம்ம வாகனத்தில் உலா
பல்லவர்மேடு தீப்பாஞ்சியம்மன் புதிய சிம்ம வாகனத்தில் உலா
ADDED : மார் 10, 2024 12:54 AM

காஞ்சிபுரம்:காஞ்சிபுரம் பல்லவர்மேட்டில் தீப்பாஞ்சியம்மன் கோவில் உள்ளது. பழமையான இக்கோவிலில், உற்சவ நாட்களில் அம்மன் வீதியுலா செல்ல வாகனம் இல்லாமல் இருந்தது. இதனால், வாடகைக்கு வாகனம் எடுத்து வந்து அம்மன் வீதியுலா சென்று வந்தார்.
இந்நிலையில், கோவில் நிர்வாகம் மற்றும் உபயதாரர்கள் சார்பில், தீப்பாஞ்சியம்மன் கோவிலுக்கு புதிதாக சிம்ம வாகனம் செய்ய முடிவு செய்தனர்.
அதன்படி, 5 அடி உயரம், 6 நீளத்தில் அத்திமரத்தில், புதிதாக சிம்ம வாகனம் சமீபத்தில் செய்யப்பட்டது.
மஹாசிவராத்திரி மற்றும் அமாவாசையையொட்டி தீப்பாஞ்சியம்மன் நேற்று புதிய சிம்ம வாகனத்தில் எழுந்தருளி நான்கு ராஜவீதி மற்றும் பல்லவர்மேடு பகுதியில் வீதியுலா வந்தார்.