/
உள்ளூர் செய்திகள்
/
காஞ்சிபுரம்
/
காஞ்சி அஷ்டபுஜ பெருமாள் கோவிலில் வரும் 30ல் சொர்க்கவாசல் திறப்பு விழா
/
காஞ்சி அஷ்டபுஜ பெருமாள் கோவிலில் வரும் 30ல் சொர்க்கவாசல் திறப்பு விழா
காஞ்சி அஷ்டபுஜ பெருமாள் கோவிலில் வரும் 30ல் சொர்க்கவாசல் திறப்பு விழா
காஞ்சி அஷ்டபுஜ பெருமாள் கோவிலில் வரும் 30ல் சொர்க்கவாசல் திறப்பு விழா
ADDED : டிச 25, 2025 05:47 AM
காஞ்சிபுரம்: காஞ்சிபுரம் அஷ்டபுஜ பெருமாள் கோவிலில், வைகுண்ட ஏகாதசியையொட்டி, வரும் 30ம் தேதி சொர்க்கவாசல் திறப்பு விழா நடக்கிறது.
காஞ்சிபுரத்தில் பரமபதவாசல் எனப்படும் சொர்க்கவாசல் கொண்ட ஒரே கோவிலான அஷ்டபுஜ பெருமாள் கோவில், பெருமாளின் 108 திவ்ய தேசங்களில், 44வது திவ்ய தேசமாக திகழ்கிறது.
ஆண்டுதோறும் இக் கோவிலில் வைகுண்ட ஏகா தசியன்று, சொர்க் க வாசல் திறப்பு விழா நடைபெறும். ஏகாதசி சொர்க்கவாசல் எனப்படும் பரமபதவாசல் திறப்பு வரும் 30ம் தேதி நடைபெறுகிறது.
இதுகுறித்து, காஞ்சி புரம் அஷ்டபுஜ பெருமாள் கோவில் அறங்காவலர் குழு தலைவர் சந்தோஷ் குமார் கூறியதாவது:
சொர்க்கவாசல் திறப்பையொட்டி, வரும் 30ம் தேதி அதிகாலை 3:00 மணிக்கு கோபூஜையும், தொடர்ந்து, சுப்ரபாதம், விஸ்வரூப தரிசனம் உள்ளிட்டவை நடக்கிறது. அதிகாலை 4:45 மணிக்கு சொர்க்கவாசல் திறக்கப்பட்டு, சொர்க்கவாசல் வழியாக பெருமாள் எழுந்தருள்கிறார்.
கோவில் வளாகத்தில் புதிதாக கருங்கற்களால் கட்டப்பட்டுள்ள தோட்ட மண்டபத்தில், காலை 11:00 மணிக்கு திருமஞ்சனமும், மதியம் 2:00 மணிக்கு திருக்கல்யாண உத்சவமும் நடக்கிறது.
இரவு 7:00 மணிக்கு பெருமாள் தோட்டத்தில் இருந்து புறப்பட்டு, மாட வீதி வழியாக கோவில் வந்தடைந்து, சொர்க்கவாசல் வழியாக நம்மாழ்வாரை அழைத்து செல்லும் நிகழ்வு நடக்கிறது.
சிறப்பு சேவை கட்டணம் தரிசனத்திற்கு ஆன்லைன் மூலமும், கோவில் வளாக நுழைவு சீட்டு முகாமில் கிடைக்கும். வழக்கம்போல, இலவச தரிசன சேவை, நாள் முழுதும் உண்டு.
கடந்த 50 ஆண்டு களுக்குப்பின் இக்கோவிலில் பகல்பத்து, ராபத்து உத்சவம் கடந்த 20ம் தேதியில் இருந்து நடந்து வருகிறது.
இவ்வாறு அவர் கூறினார்.

