/
உள்ளூர் செய்திகள்
/
காஞ்சிபுரம்
/
இருளில் பொன்னேரிக்கரை சாலை வாகன ஓட்டிகள் கடும் அவதி
/
இருளில் பொன்னேரிக்கரை சாலை வாகன ஓட்டிகள் கடும் அவதி
இருளில் பொன்னேரிக்கரை சாலை வாகன ஓட்டிகள் கடும் அவதி
இருளில் பொன்னேரிக்கரை சாலை வாகன ஓட்டிகள் கடும் அவதி
ADDED : டிச 20, 2025 05:24 AM

காஞ்சிபுரம்: காஞ்சிபுரம் பொன் னேரிக்கரை சாலையில் பழுதடைந்த மின் விளக்குகளால், வாகன ஓட்டிகள் அவதிப்பட்டு வருகின்றனர்.
காஞ்சிபுரம் பொன்னேரிக்கரை சாலை வழியாக சுங்குவார்சத்திரம், ஸ்ரீபெரும்புதுார், பூந்தமல்லி, சென்னைக்கு வாகன ஓட்டிகள் சென்று வருகின்றனர்.
இந்நிலையில், ஒரு வாரமாக பொன்னேரிக்கரை சாலையில் உள்ள விளக்குகள் மற்றும் இந்திரா நகர் சந்திப்பில் உள்ள உயர்கோபுர மின்விளக்கு பழுதடைந்து எரியாமல் உள்ளது. இதனால் அப்பகுதி இருளில் மூழ்கியுள்ளது.
இதனால், ரயில்வே மேம்பாலத்தில் இருந்து, இந்திரா நகரை கடக்கும் இருசக்கர வாகன ஓட்டிகள், அடிக்கடி விபத்தில் சிக்கி வருகின்றனர்.
எனவே, பழுதடைந்த தெரு மின்விளக்குகள் மற்றும் உயர்கோபுர மின்விளக்குகளை சீரமைக்க, மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என, வாகன ஓட்டிகள் வலியுறுத்தி வருகின்றனர்.