/
உள்ளூர் செய்திகள்
/
காஞ்சிபுரம்
/
காஞ்சியில் மருத்துவ கருத்தரங்கம்
/
காஞ்சியில் மருத்துவ கருத்தரங்கம்
ADDED : அக் 31, 2025 10:06 PM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
காஞ்சிபுரம்: இந்திய மருத்துவ சங்கம் காஞ்சிபுரம் கிளை, ராஜலட்சுமி மருத்துவ கல்லுாரி, தமிழ்நாடு புற்றுநோய் அறுவை சிகிச்சை மருத்துவர்கள் சங்கம் ஆகியவை சார்பில், மார்பக புற்றுநோய் குறித்த கருத்தரங்கம் காஞ்சிபுரத்தில் நேற்றுமுன்தினம் நடந்தது.
இந்திய மருத்துவ சங்கம் காஞ்சிபுரம் கிளை தலைவர் ரவி தலைமை வகித்தார். செயலர் முத்துக்குமரன் முன்னிலை வகித்தார். தமிழ்நாடு புற்றுநோய் அறுவை சிகிச்சை மருத்துவர்கள் சங்க தலைவர் சுப்பையா, மார்பக புற்றுநோய் குறித்து பேசினார்.

