/
உள்ளூர் செய்திகள்
/
காஞ்சிபுரம்
/
காஞ்சி அங்காளம்மன் கோவிலில் மயானக்கொள்ளை உற்சவம் விமரிசை
/
காஞ்சி அங்காளம்மன் கோவிலில் மயானக்கொள்ளை உற்சவம் விமரிசை
காஞ்சி அங்காளம்மன் கோவிலில் மயானக்கொள்ளை உற்சவம் விமரிசை
காஞ்சி அங்காளம்மன் கோவிலில் மயானக்கொள்ளை உற்சவம் விமரிசை
ADDED : மார் 10, 2024 01:21 AM

காஞ்சிபுரம்:காஞ்சிபுரம் அங்காள பரமேஸ்வரி அம்மன் கோவிலில், மயானக்கொள்ளை பெருவிழா நேற்று விமரிசையாக நடந்தது. விழாவையொட்டி, கடந்த 7ல் கணபதி ஹோமம் மற்றும் பந்தக்கால் விழாவும். நேற்று முன்தினம் இரவு, மஹா சிவராத்திரி விழாவும் நடந்தது. இதில், சிவலிங்க பூஜையுடன் அங்காள பரமேஸ்வரி அம்மன் ராஜ வீதிகளில் வீதியுலா வந்தார்.
நேற்று மாலை மயானக்கொள்ளை பெருவிழா நடந்தது. இதில், மலர் அலங்காரத்தில் எழுந்தருளிய அங்காள பரமேஸ்வரி அம்மன், ராஜ வீதிகளில் உலா வந்தார்.
கீழண்டை ராஜவீதி, புத்தேரி தெரு வழியாக சர்வதீர்த்தம் அடுத்த மயானத்தில் மயானக்கொள்ளை பெருவிழா நடந்தது.
சிறுவர்கள், இளைஞர்கள், பெரியவர்கள் என, பல்வேறு பக்தர்கள் பல்வேறு வடிவ காளி வேடம் அணிந்து நேர்த்திக்கடன் செலுத்தினர். காஞ்சி வீரசிலம்பம் பயிற்சி பள்ளி மாணவர்களின் தீப்பந்தம் ஏந்தி பல்வேறு சாகசம் நிகழ்த்தினர்.
விழாவில், ஆயிரக்கணக்கான பக்தர்கள் பங்கேற்றனர். நேர்த்திக்கடனாக காய்கறிகள், பழவகைகள், கொழுக்கட்டை உள்ளிட்டவற்றை சூறைவிட்டனர்.
இன்று இரவு 7:00 மணிக்கு அம்மனுக்கு ஊஞ்சல் சேவையும், தொடர்ந்து கும்பம் படையிலிடப்பட்டு பக்தர்களுக்கு அன்னபிரசாதமும் வழங்கப்பட உள்ளது. நாளை காலை 7:00 மணிக்கு மஞ்சள் நீராட்டு விழாவும், அம்மன் வீதியுலாவும் நடக்கிறது.
விழாவிற்கான ஏற்பாட்டை பெரிய காஞ்சிபுரம் பருவதராஜ குல மீனவ சமூகத்தினர் செய்திருந்தனர்.

