/
உள்ளூர் செய்திகள்
/
காஞ்சிபுரம்
/
காஞ்சி கச்சபேஸ்வரர் கோவிலில் 20ல் மண்டலாபிஷேகம் நிறைவு
/
காஞ்சி கச்சபேஸ்வரர் கோவிலில் 20ல் மண்டலாபிஷேகம் நிறைவு
காஞ்சி கச்சபேஸ்வரர் கோவிலில் 20ல் மண்டலாபிஷேகம் நிறைவு
காஞ்சி கச்சபேஸ்வரர் கோவிலில் 20ல் மண்டலாபிஷேகம் நிறைவு
ADDED : மார் 15, 2024 09:39 PM
காஞ்சிபுரம்:காஞ்சிபுரம் ராஜ வீதியில் அமைந்துள்ள கச்சபேஸ்வரர் கோவில், 1,600 ஆண்டுகள் பழமை வாய்ந்தது. பல்வேறு சிறப்பு பெற்ற இக்கோவில் கும்பாபிஷேகம், கடந்த 1954 மற்றும் 2005ல் நடந்தது.
இந்நிலையில், இக்கோவிலை புதுப்பித்து கும்பாபிஷேகம் நடத்த காஞ்சி நகர செங்குந்த மகாஜன சங்க சமுதாயத்தினர் மற்றும் ஹிந்து அறநிலைய துறையினர் முடிவு செய்தனர்.
அதன்படி, கும்பாபிஷேகத்தை ஒட்டி திருப்பணி துவக்குவதற்காக, 2022 பிப்., 11ல் பாலாலயம் நடந்தது.
இதில், 3 கோடி ரூபாய் செலவில் ராஜகோபுரம் மற்றும் கோவிலில் உள்ள பிற கோபுரங்கள் புதுப்பிக்கப்பட்டு, பிப்., 1ல் கும்பாபிஷேகம் விமரிசையாக நடந்தது.
தொடர்ந்து, மண்டலாபிஷேக சிறப்பு பூஜை நடந்து வருகிறது. இதில், 48வது நாளான வரும் 20ம் தேதி மண்டலாபிஷேக நிறைவு விழா நடக்கிறது.
இதில், கோவில் சர்வசாதகம் சுப்பிரமணிய குருக்கள், இஷ்டசித்தி பிரபாகர குருக்கள் தலைமையில், 1,008 சங்காபிஷேகமும், சிறப்பு அபிஷேகமும், தீபாராதனைகளும் நடைபெறுகிறது.
இரவு கேடயத்தில் சுவாமி வீதியுலாவும், கலைநிகழ்ச்சியும் நடைபெற உள்ளது என, காஞ்சிபுரம் நகர செங்குந்த மகாஜன சங்க நிர்வாகக் குழு தலைவர் சிவகுரு, கோவில் திருப்பணிக்குழு தலைவர் பெருமாள், செயலர் சுப்பராயன் ஆகியோர் தெரிவித்தனர்.

