/
உள்ளூர் செய்திகள்
/
காஞ்சிபுரம்
/
சாமந்தி மாலை அலங்காரத்தில் முருகன்
/
சாமந்தி மாலை அலங்காரத்தில் முருகன்
ADDED : நவ 19, 2025 04:51 AM

ஸ்ரீபெரும்புதுார், வல்லக்கோட்டை முருகன் கோவிலில், கார்த்திகை மாத முதல் செவ்வாய் கிழமையான நேற்று, சிறப்பு அபிஷேகம் மற்றும் செண்பகம், சாமந்தி மாலை அலங்காரத்தில் முருகப்பெருமான் காட்சியளித்தார்.
காஞ்சிபுரம் மாவட்டம், ஸ்ரீபெரும்புதுார் அருகே, வல்லக்கோட்டை முருகன் கோவில் அமைந்துள்ளது. 1200 ஆண்டுகளுக்கு மேல் பழமைவாய்ந்த இக்கோவில், ஏழு அடி உயரத்தில் வள்ளி, தெய்வானையுடன் முருகப்பெருமான் அருள்பாளிக்கிறார்.
இக்கோவிலில், கார்த்திகை மாத முதல் செவ்வாய் கிழமையான நேற்று, காலை 5:00 மணிக்கு சன்னிதி திறக்கப்பட்டு, கோ பூஜை செய்யப்பட்டது. இதையடுத்து, சிறப்பு அபிஷேகத்தை தொடர்ந்து, வெற்றிலை மாலை அலங்காரத்தில் மூலவர் அருள்பாலித்தார்.
அதேபோல், சஷ்டி மண்டபத்தில் செண்பகம் மற்றும் மலர் மாலை அலங்காரத்தில் உற்சவர் வள்ளி தெய்வானை சமேத சுப்பிரமணிய சுவாமி பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.
கார்த்திகை மாதம் தொடங்கியதை அடுத்து, சபரி மலை ஐய்யப்பன் கோவிலுக்கு செல்லும் பக்தர்கள், முருகப்பெருமானை வணங்கி மாலை அணிந்து விரதத்தை துவங்கினர்.
ஏற்பாடுகளை, கோவில் செயல் அலுவலர் செந்தில் குமார், அறங்காவல குழு தலைவர் செந்தில்தேவ்ராஜ் மற்றும் அறங்காவல குழுவினர் செய்திருந்தனர்.

