ADDED : டிச 16, 2025 04:25 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
அய்யங்கார்குளம்: அய்யங்கார்குளம் வடகரையில் உள்ள மகாலட்சுமி தாயார் கோவிலில், கும்பாபிஷேக மூன்றாம் ஆண்டு நிறைவு விழா நேற்று நடந்தது.
காஞ்சிபுரம் அடுத்த அய்யங்கார்குளம் வடகரையில் மகாலட்சுமி தாயார் உள்ளது. இக்கோவிலில் கும்பாபிஷேக மூன்றாம் ஆண்டு விழாவையொட்டி நேற்று காலை 10:30 மணிக்கு 108 சங்காபிஷேகமும், தொடர்ந்து மஹாதீப ஆராதனையும், பிற்பகல் 12:00 மணிக்கு பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.
மாலை 4:30 மணிக்கு திருவிளக்கு பூஜை நடந்தது. இதில், அர்ச்சகர்கள் லலிதா சகஹஸ்வர நாமம் மற்றும் வேத மந்திரங்கள் ஓத, பூஜையில் பங்கேற்ற பெண்கள் குத்து விளக்கேற்றி, மஞ்சள், குங்குமம், மலர்களால் அர்ச்சனை செய்தனர்.
விநாயகர், காமாட்சியம்மன், துர்கா, மஹாலட்சுமி, சரஸ்வதி மற்றும் அவரவர் குல தெய்வத்தை வேண்டி பூஜை செய்தனர்.

