/
உள்ளூர் செய்திகள்
/
காஞ்சிபுரம்
/
ஐ.டி.ஐ.,யில் மாணவர் சேர்க்கை நவ., 28 வரை அவகாசம் நீட்டிப்பு
/
ஐ.டி.ஐ.,யில் மாணவர் சேர்க்கை நவ., 28 வரை அவகாசம் நீட்டிப்பு
ஐ.டி.ஐ.,யில் மாணவர் சேர்க்கை நவ., 28 வரை அவகாசம் நீட்டிப்பு
ஐ.டி.ஐ.,யில் மாணவர் சேர்க்கை நவ., 28 வரை அவகாசம் நீட்டிப்பு
ADDED : நவ 19, 2025 04:49 AM
காஞ்சிபுரம்: காஞ்சிபுரத்தில் புதிதாக துவக்கப்பட்டுள்ள, ஐ.டி.ஐ., எனப்படும் அரசு தொழிற்பயிற்சி நிலையத்தில், நடப்பு கல்வி ஆண்டிற்கான நேரடி சேர்க்கை, நவ., 28ம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.
காஞ்சிபுரம் புத்தேரி, கைலாசநாதர் கோவில் தெருவில், கடந்த ஆக., 25ம் தேதி, தொழிற்பயிற்சி நிலையம் புதிதாக துவக்கப்பட்டது. இங்கு, பல்வேறு தொழிற்பிரிவுகளில் பயிற்சி அளிக்கப்பட்டு வருகிறது.
நடப்பு கல்வியாண்டில், 75 மாணவ - மாணவியர் பயின்று வருகின்றனர். தொழிற்பயிற்சி நிலையத்தில், 2025 -- 26ம் கல்வி ஆண்டுக்கான மாணவ --- மாணவியர் சேர்க்கைக்கு நவ., 14 கடைசி நாளாக அறிவிக்கப்பட்டு இருந்தது. தற்போது, மாணவ - மாணவியர் சேர்க்கைக்கான அவகாசம், நவ., 28ம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.
எனவே, 8, 10ம் வகுப்புகளில் தேர்ச்சி பெற்றவர்கள் 9, 10, பிளஸ் 1, பிளஸ் 2 வகுப்புகளில் தேர்ச்சி பெறாதவர்கள், கல்லுாரி முடித்தவர்களும் விண்ணப்பிக்கலாம்.
இங்கு பயிற்சி முடித்தவுடன் வளாக நேர்காணல் நடத்தி தொழில் நிறுவனங்களில் 100 சதவீதம் வேலை வாய்ப்பு வழங்கப்படும். தமிழ் புதல்வன் திட்டத்தின் கீழ் மாணவர்களுக்கு 750 ரூபாய் உதவித்தொகையும், புதுமைப்பெண் திட்டத்தின் கீழ், மாணவியருக்கு 1,000 ரூபாயும் வழங்கப்படும்.
பாட புத்தகங்கள், 2 செட் சீருடைகள், தையல் கட்டணம், பஸ் பாஸ், ஷூ உள்ளிட்டவை இலவசமாக வழங்கப்படுகிறது. பயிற்சி கட்டணம் இல்லை.
மேலும் விபரங்களுக்கு 94990 55675, 98408 67350 ஆகிய மொபைல் போன் எண்களில் தொடர்பு கொள்ளலாம் என, தொழிற்பயிற்சி நிலைய முதல்வர் எஸ்.காய்த்ரி, பயிற்சி அலுவலர் எஸ்.செழியன் ஆகியோர் தெரிவித்தனர்.

