ADDED : மார் 18, 2026 05:59 AM

அ யனி ரக பலா சாகுபடி குறித்து, திருவள்ளூர் மாவட்டம், காளிகாபுரம் கிராமத்தைச் சேர்ந்த பட்டதாரி இளைஞர் எம்.ராஜீவ் காந்தி கூறியதாவது:
மலை மண் தோட்டத்தில், வரப்பு பயிராக அயனி ரக பலா மரக்கன்றுகளை நட்டுள்ளேன். இது, கேரளா, நாகர்கோவில் உள்ளிட்ட பகுதிகளில் அதிகமாக விளையும் பழ மரமாகும்.
நம்மூர் மலை மண்ணுக்கு எப்படி வரும் என, நினைத்தேன். இது, பிற பழ மரங்களை காட்டிலும், வேகமாக வளர்க்கிறது. பலா பழம் விளைச்சல் சீசனில், அயனி பலாவிற்கு பஞ்சம் இருக்காது, அந்த அளவிற்கு மகசூல் கொடுக்கும்.
குறிப்பாக, அயனி ரக பலா மரக்கன்றுகளை விதையில் இருந்து, உற்பத்தி செய்து வளர்த்தால் மட்டுமே, மரப்பொருட்கள் செய்வதற்கும், பழ மகசூல் என, இரு வித பயன்பாட்டிற்கு வரும். ஒட்டுச்செடியாக வளர்ப்பதை முற்றிலும் தவிர்க்க வேண்டும்.
பிற பழ மரங்களை வளர்க்கும் போது, ஒட்டு மரங்களை தேர்வு செய்து நடலாம். அது, பழ மகசூலுக்கு மட்டுமே பயனுள்ளதாக இருக்கும்.
இந்த அயனி ரக பலா, செங்குத்தான உயரத்தில் செல்வதால், விதையில் இருந்து உற்பத்தி செய்யப்படும் மரக்கன்றுகளை வறட்சி, காற்று உள்ளிட்ட இயற்கைக்கு தாங்கி வளரும் தன்மை பெறும். பழ மகசூலுக்கு, பஞ்சமும் இருக்காது.
இவ்வாறு அவர் கூறினார்.
தொடர்புக்கு - எம்.ராஜீவ் காந்தி, 89402 22567.
