/
உள்ளூர் செய்திகள்
/
காஞ்சிபுரம்
/
ரேஷன் பணிக்கு நேர்காணல் இன்று ரத்து
/
ரேஷன் பணிக்கு நேர்காணல் இன்று ரத்து
ADDED : நவ 29, 2024 08:23 PM
காஞ்சிபுரம்:காஞ்சிபுரம் மண்டல கூட்டுறவு இணைப் பதிவாளர் அலுவலகத்தின் கட்டுப்பாட்டில், சில கூட்டுறவு சங்கங்களில், 35 ரேஷன் கடை விற்பனையாளர் மற்றும் 16 உதவியாளர் பணியிடங்கள் காலியாக உள்ளன.
இதில், ரேஷன் கடை விற்பனையாளர்கள் பதவிக்கு, 3,797 பேர் மற்றும் உதவியாளர் பணியிடங்களுக்கு, 995 பேர் என மொத்தம், 4,792 பேர் விண்ணப்பித்து இருந்தனர். இதில், 112 விண்ணப்பங்கள் நிராகரிக்கப்பட்டு, 4,680 பேருக்கு நேர்காணலில் பங்கேற்க, 'ஆன்லைன்' வாயிலாக அனுமதி அளிக்கப்பட்டு இருந்தன.
காஞ்சிபுரம் கூட்டுறவு இணைப் பதிவாளர் அலுவலக வளாகத்தில், நவ.,25ம் தேதி துவங்கியது. வட கிழக்கு பருவ மழையை முன்னிட்டு இன்று கன மழை பெய்யக்கூடும் என்பதால், இன்று நடைபெறவிருந்த நேர்காணல் ரத்து செய்யப்பட்டு உள்ளது.
இதற்கு பதிலாக, டிச.,7ல் நேர்காணல் நடத்தப்படும் என, கூட்டுறவு துறை தெரிவித்து உள்ளது.

