/
உள்ளூர் செய்திகள்
/
காஞ்சிபுரம்
/
வீட்டு மனை பட்டா வழங்க கரும்பாக்கத்தில் வலியுறுத்தல்
/
வீட்டு மனை பட்டா வழங்க கரும்பாக்கத்தில் வலியுறுத்தல்
வீட்டு மனை பட்டா வழங்க கரும்பாக்கத்தில் வலியுறுத்தல்
வீட்டு மனை பட்டா வழங்க கரும்பாக்கத்தில் வலியுறுத்தல்
ADDED : ஜன 14, 2025 12:23 AM
உத்திரமேரூர், உத்திரமேரூர் ஒன்றியம், அரும்புலியூர்ஊராட்சிக்கு உட்பட்டது கரும்பாக்கம். இந்தகிராமத்தில், 120 ஆதிதிராவிடர் குடும்பத்தினர்,பல ஆண்டுகளாக புறம்போக்கு நிலத்தில் வீடு கட்டி வசித்து வருகின்றனர்.
இப்பகுதிவாசிகள் வீடு கட்டியுள்ள நிலம்,அங்குள்ள அம்மன் கோவிலுக்கு சொந்தமானது எனவும், இதனால், அந்நிலத்தில் மனை பட்டா வழங்குவதில் சிக்கல் உள்ளதாக கூறப்படுகிறது.
இதனால், அரசு சார்ந்த பல சலுகைகள், தாங்கள் பெற இயலாத நிலை உள்ளதாக அப்பகுதியினர் புலம்பி வருகின்றனர்.
இதுகுறித்து, கரும்பாக்கம் கிராமவாசிகள்கூறியதாவது:
பல ஆண்டுகளாக, இப்பகுதியில் வீடு கட்டி வசித்து வருகிறோம். எங்களது குடியிருப்பு பகுதி, அம்மன் கோவில் நிலமாக உள்ளது.
இருப்பினும், அக்கோவில் கிராமத்திற்குசொந்தமானது என்பதால், நிலவகை மாற்றம் செய்து பட்டா வழங்க, சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இவ்வாறு அவர்கள் கூறினர்.

