sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

செவ்வாய், ஜனவரி 06, 2026 ,மார்கழி 22, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

காஞ்சிபுரம்

/

கனமழை எச்சரிக்கையால் குன்றத்துார், காஞ்சிபுரம் மீது கவனம் முன்னேற்பாடுகள் தயாராக இருப்பதாக தகவல்

/

கனமழை எச்சரிக்கையால் குன்றத்துார், காஞ்சிபுரம் மீது கவனம் முன்னேற்பாடுகள் தயாராக இருப்பதாக தகவல்

கனமழை எச்சரிக்கையால் குன்றத்துார், காஞ்சிபுரம் மீது கவனம் முன்னேற்பாடுகள் தயாராக இருப்பதாக தகவல்

கனமழை எச்சரிக்கையால் குன்றத்துார், காஞ்சிபுரம் மீது கவனம் முன்னேற்பாடுகள் தயாராக இருப்பதாக தகவல்


ADDED : டிச 17, 2024 12:52 AM

Google News

ADDED : டிச 17, 2024 12:52 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

காஞ்சிபுரம், டிச. 17--


காஞ்சிபுரம் மாவட்டத்தில், வடகிழக்கு பருவமழை தீவிரமாக பெய்து வரும் நிலையில், காஞ்சிபுரம் உள்ளிட்ட தமிழகத்தின் வட மாவட்டங்களில் கனமழை பெய்யும் எனவும், ஆரஞ்ச் நிற எச்சரிக்கையை, சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

இதற்கான முன்னேற்பாடுகளை காஞ்சிபுரம் மாவட்டம் ஏற்கனவே செய்திருந்தாலும், இன்று கனமழை பெய்யும் என தெரிவிக்கப்பட்டுள்ளதால், காஞ்சிபுரம் மற்றும் குன்றத்துார் ஆகிய இரு தாலுகாக்கள் மீது அதிகாரிகளின் முழு கவனம் திரும்பியுள்ளது.

மாவட்டத்தில் மழை, வெள்ளம் பாதிக்கும் 72 இடங்கள், அதிகாரிகள் கண்காணிப்பு வளையத்திற்குள் கொண்டு வரப்பட்டுள்ளன. தடுப்பு பணிகளுக்காக 11 துறை அலுவலர்கள் இடம் பெற்றுள்ள 21 மண்டல குழுக்கள் ஏற்படுத்தப்பட்டு உள்ளன.

இந்த குழுக்கள் தயாராக இருக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது.

காஞ்சிபுரம் மாநகராட்சியில், மரம் அறுக்கும் இயந்திரம், லைப் ஜாக்கெட், பொக்லைன், பொக்லைன் உள்ளிட்ட 24 வகையான மழை மீட்பு உபகரணங்களை தயார்படுத்தி வைத்திருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

காஞ்சிபுரம் மாவட்டத்தில் குன்றத்துார் தாலுகாவில் உள்ள அய்யப்பந்தாங்கல், பரணிபுத்துார், கொளப்பாக்கம், வரதராஜபுரம், ஒரத்துார், படப்பை, சோமங்கலம், ஆதனுார் ஆகிய பகுதிகள் கண்காணிப்பில் உள்ளன.

காஞ்சிபுரம் மாநகராட்சியை பொறுத்தவரையில், திருக்காலிமேடு அருந்ததியர் குடியிருப்பு, திருக்காலிமேடு, மின் நகர், பல்லவர் மேடு, பாரதி நகர் போன்ற பகுதிகள் கண்காணிப்பில் உள்ளன.

போலீஸ், தீயணைப்பு, வருவாய் துறை, உள்ளாட்சி அலுவலர் உள்ளிட்டோர் அடங்கிய குழுக்கள், மழை பாதிக்கும் இடங்களுக்கு விரைவாக செல்ல வேண்டும் என, கலெக்டர் கலைச்செல்வி, மாவட்ட வருவாய் அலுவலர் வெங்கடேஷ் ஆகியோர் தெரிவித்து வருகின்றனர்.

கடந்த 30ம் தேதி பெய்த மழை காரணமாகவும், அதற்கு முந்தைய நாட்களில் 'பெஞ்சல்' புயல் கரை கடந்த நாளில் பெய்த மழை காரணமாக, ஏரிகளில் நீர்வரத்து அதிகரித்துள்ளது.

குறிப்பாக, செம்பரம்பாக்கம் ஏரி நிரம்பி உபரி நீர் வெளியேற்றப்படுகிறது. அடையாற்றின் இரு கரை தொட்டு வெள்ள நீர் செல்லும் நிலையில், இன்று கனமழை பெய்யும் என தெரிவிக்கப்பட்டதால், மேலும் உபரி நீர் திறக்க வேண்டி வரும் என அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.

இதனால், அடையாற்றின் கரையை தாண்டி வெள்ள நீர் வெளியேற வாய்ப்பு உள்ளதால், வரதராஜபுரம், வெளிவட்ட சாலை, ஆதனுார், படப்பை சுற்றிய பகுதிகளுக்கு வெள்ள அபாயம் ஏற்படும் என, அச்சம் தெரிவிக்கின்றனர்.

இருப்பினும், செம்பரம்பாக்கம் ஏரியில் இருந்து, உபரி நீர் தொடர்ந்து வெளியேறுவதால், தற்போது அச்சப்பட தேவையில்லை என, மாவட்ட உயரதிகாரிகள் தெரிவித்து உள்ளனர்.

ஏரிகள் உடைப்பு, மழைநீர் சூழ்ந்த வீடுகள் போன்ற பாதிப்பு ஏற்பட்டால், மீட்பு பணி மேற்கொள்ள, 56 ஜெனரேட்டர், 69 மரம் அறுக்கும் இயந்திரம், 13,000 மணல் மூட்டை பைகள், 12,000 மணல்

மேலும், 3,880 சவுக்கு கட்டைகள், 60 ஜே.சி.பி., இயந்திரங்கள் 6 பொக்லைன், 115 மோட்டார் பம்புகள் போன்ற பல்வேறு உபகரணங்கள் மூலம் மீட்பு பணிகள் செய்வோம் என, அதிகாரிகள் நம்பிக்கை தெரிவிக்கின்றனர்.






      Dinamalar
      Follow us