/
உள்ளூர் செய்திகள்
/
காஞ்சிபுரம்
/
சாலையோரம் குப்பை குவியல் அசோக் நகரில் சுகாதார சீர்கேடு
/
சாலையோரம் குப்பை குவியல் அசோக் நகரில் சுகாதார சீர்கேடு
சாலையோரம் குப்பை குவியல் அசோக் நகரில் சுகாதார சீர்கேடு
சாலையோரம் குப்பை குவியல் அசோக் நகரில் சுகாதார சீர்கேடு
ADDED : பிப் 06, 2024 09:53 PM

கோனேரிகுப்பம்:காஞ்சிபுரம் ஒன்றியம், கோனேரிகுப்பம் ஊராட்சி, எஸ்.எஸ்.கே., நகர், ரயில்வே மினி சுரங்கப்பாதையில் இருந்து அசோக் நகர் செல்லும் பிரதான சாலையோரம் அப்பகுதியினர் குப்பை கொட்டும் இடமாக பயன்படுத்தி வருகின்றனர்.
ஊராட்சி நிர்வாகம் முறையாக அகற்றாததால், சாலையோரம் குப்பை குவியலாக உள்ளது. இதில், கெட்டுப்போன உணவு, இறைச்சி கழிவுகள் கொட்டப்படுவதால் துர்நாற்றம் வீசுகிறது.
இதனால், அவ்வழியாக செல்வோர் முகம் சுளித்தபடி செல்கின்றனர். காற்றில் பறக்கும் குப்பையால் சுகாதார சீர்கேடு ஏற்படும் சூழல் உள்ளது.
எனவே, அப்பகுதியில் குவியலாக உள்ள குப்பையை அகற்றுவதோடு, அப்பகுதியில் குப்பை தொட்டி அமைக்க ஊராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என, கோரிக்கை எழுந்துள்ளது.