/
உள்ளூர் செய்திகள்
/
காஞ்சிபுரம்
/
தடுப்பின்றி கால்வாய் பணி அரசு பள்ளி அருகே அச்சம்
/
தடுப்பின்றி கால்வாய் பணி அரசு பள்ளி அருகே அச்சம்
ADDED : அக் 23, 2024 12:54 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
குன்றத்துார்:குன்றத்துார் அருகே, மாங்காடு - -மவுலிவாக்கம் நெடுஞ்சாலையில், 4 கி.மீ., துாரத்திற்கு, 12 கோடி ரூபாய் மதிப்பில், மழைநீர் வடிகால்வாய் அமைக்கும் பணிகள், கடந்த ஜூன் மாதம் துவங்கப்பட்டன.
வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்து வரும் நிலையிலும், கட்டுமான பணிகள் 50 சதவீதம் மட்டுமே முடிந்துள்ளன.
மேலும், பரணிபுத்துார் அரசு நடுநிலைப் பள்ளி அருகே, சாலையோரம் தடுப்புகள் இல்லாமல், கட்டுமான பணிகள் மந்த கதியில் நடக்கின்றன.
இதனால், அங்கு விபத்து ஏற்படும் ஆபத்து உள்ளது. எனவே, தடுப்புகளை அமைத்து, கால்வாய் கட்டுமான பணிகளை விரைந்து முடிக்க வேண்டும் என, சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

