/
உள்ளூர் செய்திகள்
/
காஞ்சிபுரம்
/
காஞ்சி அருகே போலி மருத்துவர் கைது
/
காஞ்சி அருகே போலி மருத்துவர் கைது
ADDED : ஆக 21, 2025 01:38 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
காஞ்சிபுரம்:காஞ்சிபுரம் அடுத்த காரை கிராமத்தில், ஆங்கில மருத்துவம் பார்த்து வந்த நபர், மருத்துவம் சார்ந்த படிப்பு முடிக்காமல் சிகிச்சை அளிப்பதாக, சுகாதாரத்துறைக்கு தகவல் கிடைத்துள்ளது.
காஞ்சிபுரம் சுகாதாரத்துறை இணை இயக்குநர் ஹிலாரினா நளினி ஜோஷிடா, காரை கிராமத்தில் செயல்பட்ட தனியார் கிளினிக்கில் நேற்று ஆய்வு நடத்தியுள்ளார்.
அப்போது, திருமலை என்பவர் பிளஸ் 2 மட்டுமே படித்துவிட்டு, காரை பகுதியில் சிகிச்சை அளித்து வந்தது தெரியவந்தது. இதையடுத்து, பொன்னேரிக்கரை போலீசில், சுகாதாரத்துறை இணை இயக்குநர் புகார் அளித்தார். காஞ்சிபுரம் சர்வதீர்த்தகுளம் தெருவை சேர்ந்த திருமலை,42. என்பவரை போலீசார் கைது செய்தனர்.