/
உள்ளூர் செய்திகள்
/
காஞ்சிபுரம்
/
ஜல்லி பெயர்ந்த சாலை சீரமைக்க எதிர்பார்ப்பு
/
ஜல்லி பெயர்ந்த சாலை சீரமைக்க எதிர்பார்ப்பு
ADDED : ஜன 14, 2025 12:19 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
வாலாஜாபாத் ஒன்றியம் அய்யன்பேட்டையில் இருந்து முத்தியால்பேட்டை ஊராட்சி, ஏரிவாய் கிராமத்திற்கு செல்லும் பிரதான சாலையில், வேகவதி ஆற்று சிறுபாலம் அருகே, ஜல்லிக் கற்கள் பெயர்ந்து, சாலை சேதமடைந்த நிலையில் உள்ளது.
இதனால், இச்சாலை வழியாக இரவு நேரங்களில் செல்லும் இருசக்கர வாகன ஓட்டிகள், நிலைதடுமாறி விழுந்து விபத்தில் சிக்கும் அபாயம் உள்ளது. எனவே, சேதமடைந்த சாலையை, 'பேட்ச் ஒர்க்' பணியாக சீரமைக்க ஊராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
- கே.ரவி,அய்யன்பேட்டை.

