/
உள்ளூர் செய்திகள்
/
காஞ்சிபுரம்
/
நாளை லீவு நாள் என்பதால் மின் குறைதீர் கூட்டம் ரத்து
/
நாளை லீவு நாள் என்பதால் மின் குறைதீர் கூட்டம் ரத்து
நாளை லீவு நாள் என்பதால் மின் குறைதீர் கூட்டம் ரத்து
நாளை லீவு நாள் என்பதால் மின் குறைதீர் கூட்டம் ரத்து
ADDED : டிச 24, 2025 06:32 AM
காஞ்சிபுரம்: காஞ்சிபுரம் தெற்கு கோட்டத்தில், நாளை நடைபெறவிருந்த மின் நுகர்வோர் குறைதீர் கூட்டம், அரசு விடுமுறை தினம் என்பதால் ரத்து செய்யப்பட்டு உள்ளது.
காஞ்சிபுரம் மின் பகிர்மான வட்டத்தில், ஒவ்வொரு வியாழக்கிழமையும் ஒரு கோட்டத்தில், மின் நுகர்வோர் கூட்டம் நடந்து வருகிறது.
டிசம்பர் மாதத்தின் நான்காவது வியாழக்கிழமை, காஞ்சிபுரம் ஒலிமுகமதுபேட் டை மின்வாரிய செயற்பொறியாளர் அலுவலகத்தில், நாளை நடக்க இருந்த காஞ்சிபுரம் தெற்கு கோட்ட மின் நுகர்வோர் குறைதீர் கூட்டம், கிறிஸ்துமஸ் விடுமுறை காரணமாக ரத்து செய்யப்பட்டுள்ளது.
அடுத்த மாத கூட்டத்தில் புகார்களை பதிவு செய்யலாம் என, மின் வாரியம் தெரிவித்துள்ளது.