/
உள்ளூர் செய்திகள்
/
காஞ்சிபுரம்
/
கான்கிரீட் தரைதளம் அமைக்காததால் வடிகால்வாய் கட்டும் பணி தடுத்து நிறுத்தம்
/
கான்கிரீட் தரைதளம் அமைக்காததால் வடிகால்வாய் கட்டும் பணி தடுத்து நிறுத்தம்
கான்கிரீட் தரைதளம் அமைக்காததால் வடிகால்வாய் கட்டும் பணி தடுத்து நிறுத்தம்
கான்கிரீட் தரைதளம் அமைக்காததால் வடிகால்வாய் கட்டும் பணி தடுத்து நிறுத்தம்
ADDED : ஆக 25, 2025 12:25 AM

உத்திரமேரூர்:-அன்னாத்துாரில், கான்கிரீட் தரைதளம் அமைக்காமல் நடந்த மழைநீர் வடிகால்வாய் கட்டும் பணியை கிராம மக்கள் தடுத்து நிறுத்தினர்.
உத்திரமேரூர் ஒன்றியம், அன்னாத்துார் கிராமத்தில், 300க்கும் மேற்பட்ட குடியிருப்புகள் உள்ளன. இங்குள்ள, திடீர் நகர் பகுதியில் மழைநீர் வடிகால்வாய் இல்லாமல் இருந்தது.
இதனால், அப்பகுதியில் மழை நேரங்களில் தெருக்களிலே மழைநீர் தேங்கி வந்தது. எனவே, அப்பகுதியில் மழைநீர் வடிகால்வாய் அமைக்க அப்பகுதிவாசிகள் கோரிக்கை விடுத்து வந்தனர்.
அதன்படி, அப்பகுதியில் ஊரக வளர்ச்சி துறையின் சார்பில், மழைநீர் வடிகால்வாய் அமைக்கும் பணி நேற்று நடந்தது. அப்போது, முதலில் வடிகால்வாயின் தரை தளத்தில் கான்கிரீட் அமைக்காமல், வடிகால்வாய் சுவர்கள் அமைக்கும் பணி நடந்தது.
இதை கண்ட கிராம மக்கள் மழைநீர் வடிகால்வாய் கட்டும் பணியை தடுத்து நிறுத்தினர்.
இதையடுத்து, ஊரக வளர்ச்சி துறையினர் வடிகால்வாய் சுவர் அமைக்கும் பணியை நிறுத்திவிட்டு, தரை தளத்தில் கான்கிரீட் அமைக்கும் பணியை தொடங்கினர்.
இது குறித்து உத்திரமேரூர் வட்டார வளர்ச்சி அலுவலர் சூரியா கூறியதாவது:
அன்னாத்துாரில் மழைநீர் வடிகால்வாய் கட்டும் பணியில், தரை தளத்தின் மீது கான்கிரீட் அமைக்கவில்லை என்று பொதுமக்கள் புகார் தெரிவித்தனர்.
இதையடுத்து, வடிகால்வாய் சுவர் கட்டும் பணி நிறுத்தப்பட்டு, தரை தளத்தின் மீது கான்கிரீட் அமைக்கும் பணி துவக்கப்பட்டுள்ளது.
இவ்வாறு அவர் கூறினார்.