/
உள்ளூர் செய்திகள்
/
காஞ்சிபுரம்
/
மாற்று திறனாளிகள் மருத்துவ முகாம்
/
மாற்று திறனாளிகள் மருத்துவ முகாம்
ADDED : நவ 16, 2024 12:49 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
உத்திரமேரூர்:உத்திரமேரூர் வட்டார வளர்ச்சி அலுவலகத்தில், ஒருங்கிணைந்த பள்ளிக்கல்வி மற்றும் மாற்றுத்திறனாளிகள் நலத்துறை சார்பில், மாற்றுத்திறனாளிகளுக்கான மருத்துவ முகாம் நேற்று நடந்தது.
வட்டார வளர்ச்சி அலுவலர் பானுமதி தலைமை தாங்கினார். மாவட்ட மாற்றுத்திறனாளி நல அலுவலர் மலர்விழி, வட்டார வள மைய மேற்பார்வையாளர் ராஜேஷ் முன்னிலை வகித்தனர்.
முகாமில், பார்வை, செவித்திறன், மனவளர்ச்சி, உடலியக்கம், மனவளர்ச்சி ஆகிய குறைபாடு உடைய 215 பேருக்கு, அடையாள அட்டை மற்றும் உபகரணங்கள் வழங்க, மருத்துவ ஆலோசனை நடந்தது.
இதில், வட்டார கல்வி அலுவலர் ஏழுமலை மற்றும் மாற்றுத்திறனாளி மாணவர்கள் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

