/
உள்ளூர் செய்திகள்
/
காஞ்சிபுரம்
/
ஏகாம்பரநாதர் கோவில் கும்பாபிேஷகம் உள்ளூர் விடுமுறை கோரும் பக்தர்கள்

ADDED : நவ 27, 2025 04:42 AM
காஞ்சிபுரம்: காஞ்சிபுரம் ஏகாம்பரநாதர் கோவிலில் நடக்க உள்ள கும்பாபிஷேகத்திற்கு, டிச., 8ம் தேதி, உள்ளூர் விடுமுறை அறிவிக்க வேண்டும் என, பக்தர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
காஞ்சிபுரம் ஏகாம்பரநாதர் கோவில், பஞ்ச பூத தலங்களில் ஒன்றான பிருத்வி தலம். இக்கோவில் முழுதும், 33 கோடி ரூபாய் மதிப்பில் திருப்பணிகள் முடிந்து, வரும் டிச., 8ம் தேதி, கும்பாபிஷேகம் நடைபெற உள்ளது.
காஞ்சிபுரம் நகர் மட்டுமின்றி, மாவட்டத்தின் அனைத்து இடங்களில் இருந்தும், வெளி மாவட்டம், வெளி மாநிலங்களில் இருந்தும், இக்கோவில் கும்பாபிஷேகத்திற்கு பக்தர்கள் வருவர்.
இதன் காரணமாக, கும்பாபிஷேகம் நடைபெறும் டிச., 8ம் தேதி, உள்ளூர் விடுமுறை அளிக்க வேண்டும் என, பக்தர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.காஞ்சி புரம் மாவட்டத்தில், ஆடிக்கிருத்திகை, வரதராஜ பெருமாள் கோவில் தேரோட்டம், கருடசேவை என, அனைத்து விழாக்களுக்கும் மூன்று ஆண்டுகளாக உள்ளூர் விடுமுறை அளிக்கப்படவில்லை. இந்நிலையில், ஏகாம்பரநாதர் கோவில் கும்பாபிஷேகத்திற்கு உள்ளூர் விடுமுறை அளிக்க, மாவட்ட நிர்வாகம் பரிசீலனை செய்ய வேண்டும் என, பக்தர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.