/
உள்ளூர் செய்திகள்
/
காஞ்சிபுரம்
/
குடிநீர் தொட்டியை சுற்றி சீர்கேடு சந்தவேலுாரில் தொற்று அபாயம்
/
குடிநீர் தொட்டியை சுற்றி சீர்கேடு சந்தவேலுாரில் தொற்று அபாயம்
குடிநீர் தொட்டியை சுற்றி சீர்கேடு சந்தவேலுாரில் தொற்று அபாயம்
குடிநீர் தொட்டியை சுற்றி சீர்கேடு சந்தவேலுாரில் தொற்று அபாயம்
ADDED : டிச 29, 2024 10:36 PM

ஸ்ரீபெரும்புதுார்:ஸ்ரீபெரும்புதுார் ஒன்றியம் சந்தவேலுார் ஊராட்சிக்குட்பட்ட அப்துர் ரஷீம் நகரில், 50க்கும் மேற்பட்ட வீடுகள் உள்ளன. இப்பகுதி வாசிகளின் பயன்பாட்டிற்காக, 30,000 லிட்டர் கொள்ளளவு கொண்ட மேல்நிலை நீர்த்தேக்க தொட்டி அமைக்கப்பட்டுள்ளது.
இந்த மேல்நிலை நீர்த்தேக்க தொட்டி, 2022 - 2023ம் ஆண்டு, 15வது நிதி குழு மானியத்தின் கீழ், 99,479 ரூபாய் மதிப்பில் சீரமைக்கப்பட்டது. அதன்பின், நீர்த்தேக்க தொட்டியை, ஊராட்சி நிர்வாகம் முறையாக பராமரிக்கவில்லை.
இதனால், அருகே உள்ள வீடுகள் மற்றும் கடையில் இருந்து வெளியேறும் குப்பை, நீர்த்தேக்க தொட்டியை சுற்றி கொட்டுகின்றனர்.
மேலும், நீர்த்தேக்க தொட்டியின் கீழ், மழைநீருடன் கழிவுநீர் மாதக்கணக்கில் தேங்கியுள்ளதால் துர்நாற்றம் வீசுவதுடன், கொசு மற்றும் விஷ ஜந்துக்களின் நடமாட்டம் அதிகரித்துள்ளது. இதனால், இந்த குடிநீரை பயன்படுத்தும் பகுதிவாசிகளுக்கு, தொற்று பாதிக்கும் அபாயம் எற்பட்டுள்ளது.
எனவே, சம்பந்தப்பட்ட அதிகாரிகள் ஆய்வு செய்து, குடிநீர் தொட்டியை சீரமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என, அப்பகுதிவாசிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

