/
உள்ளூர் செய்திகள்
/
காஞ்சிபுரம்
/
முட்டவாக்கத்தில் சேதமடைந்த பசுமை நிழல் வலை குடில்
/
முட்டவாக்கத்தில் சேதமடைந்த பசுமை நிழல் வலை குடில்
ADDED : அக் 28, 2024 12:44 AM

காஞ்சிபுரம்:காஞ்சிபுரம் அடுத்த, முட்டவாக்கம் ஊராட்சியில், 2022- - 23ம் நிதி ஆண்டு, அண்ணா மறுமலர்ச்சி திட்டத்தின்கீழ், 2 லட்ச ரூபாய் செலவில், நாற்றங்கால் உற்பத்தி செய்யும் குடில் அமைக்கப்பட்டது.
இங்கு, நாற்றங்கால் பசுமை குடிலில், மா, நாவல், அத்தி ஆகிய பழ மரங்கள் மற்றும் கொய்யா காய், புங்கன், இலுப்பை உள்ளிட்ட நிழல் தரும் மரங்களின் நாற்றுகளை உற்பத்தி செய்து, ஊராட்சிகளின் பிரதான சாலையோரம் மற்றும் அரசு புறம்போக்கு நிலங்களில் செடிகள் வளப்பதற்கு பயன்படுத்தி வந்தனர்.
மரக்கன்றுகள் பதியம் போடும் போது, வெயிலால் கருகி விடக்கூடாது மற்றும் மழையால் சாய்ந்துவிடக்கூடாது என, பசுமை குடில் அமைக்கப்பட்டது.
இதை, ஊராட்சி நிர்வாகம் தண்ணீர் தேங்கும் வயல் வெளியில் அமைத்திருக்கிறது. மேலும், பசுமை நிழல் வலையை முறையாக பராமரிப்பு செய்யாததால், பசுமை நிழல் வலை குடில் சேதம் ஏற்பட்டு, வெறும் எலும்புக்கூடாக காட்சி அளிக்கிறது.
எனவே, நாற்றாங்கல் குடிலை முறையாக சீரமைத்து பயன்பாட்டிற்கு கொண்டு வர வேண்டும் என, கோரிக்கை எழுந்துள்ளது.

