/
உள்ளூர் செய்திகள்
/
காஞ்சிபுரம்
/
சந்தவேலுாரில் மழைநீர் வடிகால் சேதம்: விபத்தில் சிக்கும் வாகன ஓட்டிகள்
/
சந்தவேலுாரில் மழைநீர் வடிகால் சேதம்: விபத்தில் சிக்கும் வாகன ஓட்டிகள்
சந்தவேலுாரில் மழைநீர் வடிகால் சேதம்: விபத்தில் சிக்கும் வாகன ஓட்டிகள்
சந்தவேலுாரில் மழைநீர் வடிகால் சேதம்: விபத்தில் சிக்கும் வாகன ஓட்டிகள்
ADDED : டிச 23, 2025 05:31 AM

ஸ்ரீபெரும்புதுார்: சென்னை --பெங்களூரு தேசிய நெடுஞ்சாலையில், சுங்குவார்சத்திரம் அடுத்த சந்தவேலுார் மேம்பாலம் அருகே, சாலையோரம் உள்ள மழைநீர் வடிகால் சேதமடைந்து உள்ளதால், அவ்வழியாக செல்லும் வாகன ஓட்டிகள் விபத்தில் சிக்கும் அச்சத்தில் சென்று வருகின்றனர்.
சென்னை -- பெங்களூரு தேசிய நெடுஞ்சாலை யில், நாள்தோறும் ஒரு லட்சத்திற்கும் மேற்பட்ட வாகனங்கள் சென்று வருகின்றன.
தேசிய நெடுஞ்சாலையை கடக்கும் வாகனங்களால், நெரிசல் மற்றும் வாகன விபத்துகள் ஏற்பட்டு வந்தன.
விபத்தை தவிர்க்க, சென்னை -- பெங்களூரு தேசிய நான்கு வழிச் சாலையை, ஆறு வழிச்சாலையாக அகலப்படுத்தவும், 18 இடங்களில் சிறுபாலங்கள் மற்றும் மூன்று இடங்களில் மேம்பாலங்கள் அமைக்கவும் தேசிய நெடுஞ்சாலை ஆணையம் திட்டமிட்டது.
இதற்காக, 654 கோடி ரூபாய் நிதி ஒதுக்கப்பட்டு, மூன்று பிரிவு களாக ஒப்பந்தம் விடப்பட்டது.
இதன்படி, மதுரவாயல் - ஸ்ரீபெரும்புதுார் வரை, 23 கி.மீ., ஸ்ரீபெரும் புதுார் -காரப்பேட்டை வரையில், 34 கி.மீ., காரப்பேட்டை வாலாஜாபேட்டை வரையில், 36 கி.மீ., துாரம் விரிவாக்க பணிகள் நடந்து வருகின்றன.
மாம்பாக்கம், சுங்குவார் சத்திரம், சேந்தமங்கலம், பிள்ளைசத்திரம் ஆகிய இடங்களில் 2021ம் ஆண்டு துவங்கிய மேம்பாலங்களின் கட்டுமான பணிகள், கால அவகாசம் நிறைவடைந்தும் முடிக்கப்படாமல் உள்ளன.
இந்நிலையில், சுங்குவார் சத்திரம் அடுத்த சந்தவேலுாரில் புதிதாக கட்டப்பட்டுள்ள மேம்பாலம் அருகே, காஞ்சிபுரம் செல்லும் மார்க்கமாக, சாலையோர மழைநீர் வடிகால் மீது உள்ள கான்கிரீட் சிலாப் சேதமடைந்து உடைந்து உள்ளது.
இதனால், தேசிய நெடுஞ்சாலையில் வேகமாக வரும் வாகனங்கள், திறந்த நிலையில் உள்ள மழைநீர் வடிகாலில் விபத்தில் சிக்குகின்றனர்.
குறிப்பாக, இரவு நேரத்தில் வரும், இருசக்கர வாகன ஓட்டிகள் பீதியில் சென்று வருகின்றனர்.
அபாயகராமாக உள்ள மழைநீர் வடிகாலை சீரமைக்க, நெடுஞ்சாலை துறையினர் சீரமைக்க வேண்டும் என, வாகன ஓட்டிகள் வலியுறுத்தி உள்ளனர்.

