/
உள்ளூர் செய்திகள்
/
காஞ்சிபுரம்
/
சிட்டியம்பாக்கத்தில் மாடுகள் உலா வாகன ஓட்டிகள் அவதி
/
சிட்டியம்பாக்கத்தில் மாடுகள் உலா வாகன ஓட்டிகள் அவதி
சிட்டியம்பாக்கத்தில் மாடுகள் உலா வாகன ஓட்டிகள் அவதி
சிட்டியம்பாக்கத்தில் மாடுகள் உலா வாகன ஓட்டிகள் அவதி
ADDED : பிப் 27, 2024 10:26 PM

சிட்டியம்பாக்கம்:வாலாஜாபாத் ஒன்றியம், சிட்டியம்பாக்கம், ஏனாத்துார், கவுரியம்மன்பேட்டை உள்ளிட்ட பகுதியில் கால்நடை வளர்ப்போர் தங்களது மாடுகளை வீட்டில் கட்டி வைத்து பராமரிக்காமல் மேய்ச்சலுக்காக அவிழ்த்துவிட்டு விடுகின்றனர்.
இதனால், போக்குவரத்துக்கு இடையூறாக ஏனாத்துார் -- சிட்டியம்பாக்கம் சாலையில் மாடுகள் சுற்றித்திரிவதால், வாகன ஓட்டிகள் சிரமத்திற்கு ஆளாகின்றனர். குறுக்கும், நெடுக்குமாக ஓடும் மாடுகளால் இருசக்கர வாகன ஓட்டிகள் விபத்தில் சிக்கும் சூழல் உள்ளது.
எனவே, போக்குவரத்துக்கு இடையூறாக சாலையில் சுற்றித்திரியும் மாடுகளை பிடித்து கொட்டிலில் அடைக்க சம்பந்தப்பட்ட ஊராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என, வாகன ஓட்டிகள் வலியுறுத்தி உள்ளனர்.