/
உள்ளூர் செய்திகள்
/
காஞ்சிபுரம்
/
3 மாதத்தில் விரிசலடைந்த கான்கிரீட் சாலை
/
3 மாதத்தில் விரிசலடைந்த கான்கிரீட் சாலை
ADDED : ஏப் 08, 2025 12:39 AM

உத்திரமேரூர், உத்திரமேரூர் ஒன்றியம், தளவாரம்பூண்டி ஊராட்சியில், பட்டாங்குளம் பழங்குடியினர் குடியிருப்பு பகுதி உள்ளது. இங்கு, 100க்கும் மேற்பட்ட பழங்குடியினர் குடியிருப்புகள் உள்ளன.
இந்த பகுதியில் நீண்ட நாட்களாக சாலை வசதி இல்லாததால், கான்கிரீட் சாலை அமைக்க அப்பகுதியினர் கோரிக்கை விடுத்து இருந்தனர். அதன்படி, 2024 --- 25ம் நிதி ஆண்டில், மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதியளிப்பு திட்டத்தின் கீழ், 5.6 லட்சம் செலவில், மூன்று மாதத்திற்கு முன் கான்கிரீட் சாலை அமைக்கப்பட்டது.
தற்போது, கான்கிரீட் சாலை தரமாக அமைக்காததால், விரிசல் ஏற்பட்டு வருகிறது. இதனால், சாலை உறுதித்தன்மையை இழந்து அதன் ஆயுட்காலம் முடிவதற்குள் முற்றிலும் சேதமடையும் நிலையில் உள்ளது.
புதிதாக அமைக்கப்பட்ட கான்கிரீட் சாலையில் விரிசல் ஏற்பட்டு வருவது, வாகன ஒட்டிகளிடையே பெரும் கவலையை ஏற்படுத்தி வருகிறது.
எனவே, விரிசல் ஏற்பட்டு வரும் கான்கிரீட் சாலையை, மீண்டும் தரமாக அமைக்க வாகன ஓட்டிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

