/
உள்ளூர் செய்திகள்
/
காஞ்சிபுரம்
/
கல்லுாரிகளுக்கான தடகள போட்டி: முதல் நாளிலேயே புது சாதனை பதிவு
/
கல்லுாரிகளுக்கான தடகள போட்டி: முதல் நாளிலேயே புது சாதனை பதிவு
கல்லுாரிகளுக்கான தடகள போட்டி: முதல் நாளிலேயே புது சாதனை பதிவு
கல்லுாரிகளுக்கான தடகள போட்டி: முதல் நாளிலேயே புது சாதனை பதிவு
ADDED : டிச 23, 2025 05:33 AM

சென்னை: சென்னை பல்கலைக்கு உட்பட்ட கல்லுாரிகளுக்கான ஏ.எல்., முதலியார் தடகளப் போட்டி, முதல் நாளிலேயே புது சாதனைகளுடன் துவங்கின.
சென்னை பல்கலை சார்பில், ஏ.எல்., முதலியார் நினைவு தடகள போட்டிகள், பெரியமேடு, நேரு விளையாட்டு அரங்கில் நேற்று காலை துவங்கின. இதில், ஓட்டப்பந்தயம், நீளம் தாண்டுதல், உயரம் தாண்டுதல், வட்டு மற்றும் குண்டு எறிதல் உள்ளிட்ட இருபாலருக்கும், 22 வகையாக போட்டிகள் நடக்கின்றன.
போட்டியில், சென்னை பல்கலைக்கு உட்பட்ட 79 இணைப்பு கல்லுாரிகளைச் சேர்ந்த 750 மாணவர்கள், 500 மாணவியர் என, மொத்தம் 1,250 வீரர் - வீராங்கனையர் உற்சாகமாக பங்கேற்று திறமையை வெளிப்படுத்தினர்.
பெண்களுக்கான 20 கி.மீ., 'ரேஸ் வாக்'கில், எம்.ஓ.பி.,வைஷ்ணவா மாணவி மஹிமா சவுத்ரி, போட்டியின் துாரத்தை 1:49.20 நிமிடத்தில் கடந்து, கடந்தாண்டின் 1:49.30 என்ற தன் சாதனையை தானே முறியடித்து, புதிய சாதனை படைத்தார்.
அதேபோல, 5,000 மீ., ஓட்டத்தில் எம்.ஓ.பி., மாணவி லதா 18:01 நிமிடத்தில் முதலிடத்தையும், அதே கல்லுாரி மாணவி கீதாஞ்சலி 18:31 நிமிடத்தில் இரண்டாமிடத்தையும் கைப்பற்றினர்.
தடை தாண்டும் 400 மீ., ஓட்டத்தில் லயோலாவின் ஹர்ஷிதா முதலிடத்தையும், அதே கல்லுாரியின் அச்தயா இரண்டாமிடத்தையும், எம்.ஓ.பி.,யின் பிரதிகா மூன்றாம் இடத்தையும் பிடித்தனர்.
சம்மட்டி எறிதலில் எத்திராஜ் மாணவி காவியா, எம்.ஓ.பி.,யின் மோனிகா ஸ்ரீ எம்.சி.சி.,யின் சோனா ஆகியோர் முதல் மூன்று இடங்களை வென்றனர்.

