/
உள்ளூர் செய்திகள்
/
காஞ்சிபுரம்
/
தாலுகாவிற்கு 4 நெல் கொள்முதல் நிலையம் நிரந்தரமாக செயல்பட கலெக்டர் உத்தரவு
/
தாலுகாவிற்கு 4 நெல் கொள்முதல் நிலையம் நிரந்தரமாக செயல்பட கலெக்டர் உத்தரவு
தாலுகாவிற்கு 4 நெல் கொள்முதல் நிலையம் நிரந்தரமாக செயல்பட கலெக்டர் உத்தரவு
தாலுகாவிற்கு 4 நெல் கொள்முதல் நிலையம் நிரந்தரமாக செயல்பட கலெக்டர் உத்தரவு
ADDED : ஆக 23, 2025 01:16 AM

காஞ்சிபுரம்:எப்போதும் இயங்கும் வகையில், தாலுகாவிற்கு நான்கு நெல் கொள்முதல் நிலையங்களை துவக்க நடவடிக்கை எடுங்கள் என, நுகர்பொருள் வாணிப கழகத்திற்கு, கலெக்டர் அறிவுரை வழங்கினார்.
காஞ்சிபுரம் மாவட்ட விவசாயிகள் குறை தீர் கூட்டம், நடந்தது.
கலெக்டர் கலைச்செல்வி, விவசாயிகளுக்கு மக்காச்சோளம் சாகுபடி செய்வதற்கு விதைகள், கால்நடை வளர்ப்பு கடன் உள்ளிட்டவைகளை வழங்கினார்.
அதன் பின், விவசாயிகள் பேசியதாவது:
தனசேகர் , விவசாயி பிச்சிவாக்கம்: நெல் கொள்முதல் நிலை யங்களுக்காக, அறு வடை செய்த நெல் காத் திருக்கிறது. இன்னமும் துவக்கவில்லை. தனியார் நெல் வியாபாரிகளிடம் குறைந்த விலைக்கு விற்பனை செய்ய வேண்டி உள்ளது.
கலெக்டர், கலை செல்வி: நெல் கொள்முதல் நிலையங்கள் துவக்க உத்தரவு போட்டு எத்தனை நாட்களாகிறது. ஏன் இன்னமும் துவக்கவில்லை. சீசன் தோறும் துவக்குவதில் உங்களுக்கு என்ன சிக்கல். அது உங்களின் வழக்கமான வேலை தானே ஏன் செய்யவில்லை.
நுகர் பொருள் வாணிப கழக அதிகாரி: அடுத்த வாரத்தில், துவக்க நடவடிக்கை எடுக்கப்படும்.
மாசிலாமணி, விவ சாயி கைத்தண்டலம்: ஒவ்வொரு தாலு காவிற்கும் நிரந் தரமாக நெல் கொள்முதல் நிலை யங்களை துவக்கி வைக்க வேண்டும்.
கலெக்டர், கலைச் செல்வி: எப்போதும் இயங்கும் வகையில், தாலுகாவிற்கு நான்கு நெல் கொள்முதல் நிலையங்களை துவக்க நடவடிக்கை எடுங்கள். இந்த பிரச்னைக்கு தீர்வாக இருக்கும்.
இவ்வாறு விவாதம் நடந்தது.