sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், ஜனவரி 08, 2026 ,மார்கழி 24, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

காஞ்சிபுரம்

/

ஆசிரமத்தில் ஆதரவற்றோருக்கு நிதி வசூலிப்பதாக 'பலே' மோசடி 20 பெண்களுடன் 'கால்சென்டர்' இயங்கியது அம்பலம்

/

ஆசிரமத்தில் ஆதரவற்றோருக்கு நிதி வசூலிப்பதாக 'பலே' மோசடி 20 பெண்களுடன் 'கால்சென்டர்' இயங்கியது அம்பலம்

ஆசிரமத்தில் ஆதரவற்றோருக்கு நிதி வசூலிப்பதாக 'பலே' மோசடி 20 பெண்களுடன் 'கால்சென்டர்' இயங்கியது அம்பலம்

ஆசிரமத்தில் ஆதரவற்றோருக்கு நிதி வசூலிப்பதாக 'பலே' மோசடி 20 பெண்களுடன் 'கால்சென்டர்' இயங்கியது அம்பலம்


ADDED : மார் 07, 2024 12:28 AM

Google News

ADDED : மார் 07, 2024 12:28 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

சென்னை:சேப்பாக்கத்தில் பழைய பேப்பர் கடை நடத்தி வருபவர், முத்து, 41. சில தினங்களாக, இவரது மொபைல் போனுக்கு தொடர்பு கொண்டு பெண் ஒருவர் பேசியுள்ளார்.

அப்போது அவர், 'தான் அன்னை தெரசா அனாதை இல்லத்தில் பணிபுரிந்து வருவதாகவும், ஆசிரமத்தில் வயதான ஆதரவற்ற பெண்கள், குழந்தைகள் மற்றும் மாற்றுத்திறனாளிகள் இருப்பதாகவும், அவர்களுக்கு உதவ வேண்டும்' என, கோரிக்கை வைத்துள்ளார்; முத்துவும் பின் பார்க்கலாம் என தெரிவித்துள்ளார்.

வலியுறுத்தல்


அதன்பின், 'வாட்ஸாப்'பில் அவருக்கு அடிக்கடி,உதவிகோரி இது தொடர்பாக குறுஞ்செய்திகள் வந்துள்ளன.

இந்த நிலையில், ஜன., 12ம் தேதி முத்துவை தொடர்புகொண்ட பெண் ஒருவர், 'ஆதரவற்ற இல்லம் குறித்த தகவல்கள்,படங்கள் உள்ளிட்டவற்றை முத்துவின் மொபைல் போனுக்கு வாட்ஸாப்பில் அனுப்பி வைத்துள்ளேன்; உங்களால் முடிந்ததை செய்து ஆதரவற்றோருக்கு மனம் இரங்குங்கள் சார்' என வலியுறுத்தி உள்ளார்.

தனிப்படை


மேலும், பணம் அனுப்ப வேண்டி, 'கூகுள்பே' எண் மற்றும் வங்கி கணக்கு விபரங்களையும் அனுப்பி வைத்துள்ளார்.

அதற்கு முத்து, 'நேரில் வந்தால் பணம் தருகிறேன்; யாரையாவது அனுப்பி வையுங்கள்' என கூறியுள்ளார்.

இதையடுத்து, சுதானந்த் என்பவர் முத்துவிடம் நேரில் சென்று, கடந்த 12ம் தேதி மாலை 4:00 மணியளவில், 1,000 ரூபாய் பெற்றுச் சென்றார்.

முத்துவுக்கு அவரது நடவடிக்கையில் சந்தேகம்ஏற்பட, குறிப்பிட்ட முகவரியான பெரம்பூர், படேல் சாலையில் குறிப்பிட்ட இடத்திற்கு சென்று விசாரித்துள்ளார்.

அங்கு பெரும் அதிர்ச்சி காத்திருந்தது. அப்படி ஒரு ஆதரவற்ற குழந்தைகள் இல்லமோ, முதியோர் இல்லமோ செயல்படவில்லை.

மாறாக, 'கால்சென்டர்' ஒன்று இயங்கியுள்ளது. அதில், 20க்கும் மேற்பட்ட பெண்கள் பணிபுரிந்து, ஆதரவற்ற இல்லத்தின் பெயரில் நிதியுதவி வசூலிப்பில் ஈடுபட்டது' அம்பலமானது.

இதுகுறித்து, செம்பியம் போலீசாரிடம் முத்து புகார் அளித்தார். தனிப்படை போலீசார், கால்சென்டர் நடத்தி வந்த மோசடி நபர்கள் குறித்து விசாரித்தனர்.

கைது


இதில், முக்கிய குற்றவாளியான கால்சென்டர் நிறுவனரான சிந்தாதிரிப்பேட்டையைச் சேர்ந்த கோபி, 45, என்பவர், அப்பாவி மக்களிடம் ஏமாற்றி வாங்கிய பணத்தில், கொடைக்கானலில் உல்லாசமாக இருந்தது தெரியவந்தது.

அவரையும், எண்ணுாரில் பதுங்கியிருந்த கால்சென்டர் சூப்பர்வைசர் கண்ணன், 32, என்பவரையும், செம்பியம் போலீசார் கைது செய்தனர்.

முதற்கட்ட விசாரணையில், இவர்கள், 10 கோடி ரூபாய் வரை மோசடியில் ஈடுபட்டது தெரிய வந்துள்ளது.






      Dinamalar
      Follow us