/
உள்ளூர் செய்திகள்
/
காஞ்சிபுரம்
/
ராபிடோ பைக் ஓட்டுநரை சுற்றி வளைத்த ஆட்டோ ஓட்டுநர்கள்
/
ராபிடோ பைக் ஓட்டுநரை சுற்றி வளைத்த ஆட்டோ ஓட்டுநர்கள்
ராபிடோ பைக் ஓட்டுநரை சுற்றி வளைத்த ஆட்டோ ஓட்டுநர்கள்
ராபிடோ பைக் ஓட்டுநரை சுற்றி வளைத்த ஆட்டோ ஓட்டுநர்கள்
ADDED : டிச 23, 2025 01:39 AM
ஸ்ரீபெரும்புதுார்: ஸ்ரீபெரும்புதுாரில், ராபிடோ பைக் ஓட்டுநரை ஆட்டோ ஓட்டுநர்கள் சுற்றி வளைத்ததால், பரபரப்பு ஏற்பட்டது.
ஸ்ரீபெரும்புதுார் பேருந்து நிறுத்தம் மற்றும் ராஜிவ்காந்தி நினைவகம் அருகே, ஏராளமான ஆட்டோக்கள் இயங்கி வருகின்றன. இந்நிலையில், தனியாக செல்லும் பயணியர், ஆட்டோவில் அதிக பணம் கொடுத்து செல்வதை தவிர்த்து, ராபிடோ பைக் புக் செய்து சென்று வருகின்றனர்.
தொழிற்சாலைகள் நிறைந்த பகுதியில், அதிக அளவில் ராபிடோ பைக்குகள் இயங்குவதால், தங்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்படுவதாக, ஆட்டோ ஓட்டுநர்கள் குற்றச்சாட்டு தெரிவித்து வந்தனர். நேற்று காலை ஸ்ரீபெரும்புதுார் ஆட்டோ ஓட்டுநர் ஒருவர் ராபிடோ பைக் புக் செய்து, ஸ்ரீபெரும்புதுார் பேருந்து நிலையத்தில் இருந்து, ஸ்ரீபெரும்புதுார் வட்டார போக்கு வரத்து அலுவலகம் வரை பயணித்தார்.
அங்கு, இருந்த 10 க்கும் மேற்பட்ட ஆட்டோ ஓட்டுநர்கள் ராபிடோ பைக் டாக்சி ஓட்டுநரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். பின் வட்டார போக்குவரத்து அலுவலகத்தில் புகார் தெரிவித்தனர். ஸ்ரீபெரும்புதுார் போலீசார், ஆட்டோ ஓட்டுநர்களை சமாதானம் செய்து அனுப்பி வைத்தனர்.

