/
உள்ளூர் செய்திகள்
/
காஞ்சிபுரம்
/
அடகு கடை பூட்டை உடைத்து பணம் திருடியோருக்கு வலை
/
அடகு கடை பூட்டை உடைத்து பணம் திருடியோருக்கு வலை
ADDED : டிச 21, 2025 04:26 AM
உத்திரமேரூர்: வெங்கச்சேரியில், அடகு கடையின் பூட்டை உடைத்து, நகை, பணம் திருடிய மர்ம நபர்களை போலீசார் தேடி வருகின்றனர்.
காஞ்சிபுரம் பகுதியைச் சேர்ந்தவர் வரதராம், 50. இவர், உத்திரமேரூர் ஒன்றியம், வெங்கச்சேரி கிராமத்தில், அடகு கடை வைத்து உள்ளார்.
நேற்று முன்தினம் கடையில் வியாபாரம் முடிந்த பின், இரவு 9:00 மணிக்கு வழக்கம் போல கடையை பூட்டிவிட்டு வீட்டிற்கு சென்றார்.
இந்நிலையில், நேற்று அதிகாலையில் அடகு கடையின் கதவிற்கான பூட்டு உடைக்கப்பட்டு கதவு திறந்த நிலையில் கிடந்ததை கண்ட அப்பகுதி மக்கள், கடை உரிமையாளர் மற்றும் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர்.
சம்பவ இடத்திற்கு வந்த மாகரல் போலீசார் திருட்டு நடந்த கடையில் ஆய்வு மேற்கொண்டனர்.
அப்போது, கடையின் லாக்கரில் வைத்திருந்த மூன்று சவரன் தங்க நகை, அரை கிலோ வெள்ளி நகை மற்றும் 85,000 ரூபாய் திருடு போனது தெரியவந்தது.
இதுகுறித்து, கடையின் உரிமையாளர் வரதராம் அளித்த புகாரின் பேரில், மாகரல் போலீசார் திருட்டில் ஈடுபட்ட மர்ம நபர்களை தேடி வருகின்றனர்.

