/
உள்ளூர் செய்திகள்
/
காஞ்சிபுரம்
/
அம்மிக்கல்லை போட்டு உ.பி., நபர் படுகொலை
/
அம்மிக்கல்லை போட்டு உ.பி., நபர் படுகொலை
ADDED : பிப் 27, 2024 10:21 PM
காஞ்சிபுரம்:உத்திர பிரதேசம் மாநிலத்தைச் சேர்ந்தவர்கள் சஹாரி, 40, மற்றும் சோட்டு, 35. கூலித் தொழிலாளர்களான இருவரும், காஞ்சிபுரம் மாநகராட்சிக்கு உட்பட்ட விளக்கடி கோவில் தோப்புத் தெருவில், வாடகைக்கு வீடு எடுத்து தங்கியிருந்தனர்.
காஞ்சிபுரத்தில் பெயின்ட் அடிக்கும் வேலை மற்றும் பிற வகையான கூலி வேலை செய்து வந்தனர்.
கடந்த சனிக்கிழமை இரவு, இருவரும் வீட்டில் மது அருந்தியுள்ளனர். அப்போது ஏற்பட்ட தகராறில், கோபமடைந்த சஹாரி, சோட்டுவின் தலை மீது அம்மிக்கல்லை போட்டு கொலை செய்து, அங்கிருந்து தப்பியுள்ளார்.
வட மாநில தொழிலாளர்கள் இரு நாட்களாக வராததால், அருகில் வசிப்பவர்களுக்கு சந்தேகம் ஏற்பட்டு போலீசாருக்கு தகவல் தெரிவித்து உள்ளனர்.
இதையடுத்து, விஷ்ணு காஞ்சி போலீசார் நேற்று முன்தினம் வீட்டிற்கு சென்று பார்த்த போது, சோட்டு என்பவர் கொலை செய்யப்பட்டிருப்பது தெரியவந்தது.
சடலத்தை கைப்பற்றிய போலீசார், வழக்குப்பதிவு செய்து, சஹாரியை தேடி வந்தனர். இந்நிலையில், காஞ்சிபுரம் தேரடி பகுதியில் இருந்த சஹாரியை, நேற்று முன்தினம் போலீசார் கைது செய்தனர்.

