/
உள்ளூர் செய்திகள்
/
காஞ்சிபுரம்
/
அ.தி.மு.க., வேட்பாளர் கைக்குள் 40 ஆண்டுகளாக இருக்கும் ஊராட்சி ஒரே குடும்பத்தில் 4 ஊராட்சி தலைவர்கள்
/
அ.தி.மு.க., வேட்பாளர் கைக்குள் 40 ஆண்டுகளாக இருக்கும் ஊராட்சி ஒரே குடும்பத்தில் 4 ஊராட்சி தலைவர்கள்
அ.தி.மு.க., வேட்பாளர் கைக்குள் 40 ஆண்டுகளாக இருக்கும் ஊராட்சி ஒரே குடும்பத்தில் 4 ஊராட்சி தலைவர்கள்
அ.தி.மு.க., வேட்பாளர் கைக்குள் 40 ஆண்டுகளாக இருக்கும் ஊராட்சி ஒரே குடும்பத்தில் 4 ஊராட்சி தலைவர்கள்
ADDED : மார் 20, 2024 10:11 PM

காஞ்சிபுரம்:காஞ்சிபுரம் லோக்சபா தொகுதிக்கான, அ.தி.மு.க., வேட்பாளராக, செங்கல்பட்டு மாவட்டத்தில் உள்ள புனித தோமையார் மலை ஒன்றியத்தின் கிழக்கு ஒன்றிய செயலரும், அம்மா பேரவையின் துணை செயலருமான ராஜசேகர் என்பவர் போட்டியிடுகிறார்.
இதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பை, அ.தி.மு.க., பொதுச்செயலர் பழனிசாமி வெளியிட்டுள்ளார்.
புனித தோமையார் மலை ஒன்றியத்தில் உள்ள பெரும்பாக்கம் ஊராட்சி தலைவராக, 40 ஆண்டுகளாக, இவரது குடும்பத்தினரே தொடர்ந்து பதவி வகித்து வருவதால், ராஜசேகரின் அடைமொழியாக பெரும்பாக்கம் ராஜசேகர் என மாறியுள்ளது.
கடந்த 2021ல் நடந்த உள்ளாட்சி தேர்தலில், பெரும்பாக்கம் ஊராட்சியில், ஊராட்சி தலைவர், ஒன்றிய கவுன்சிலர், வார்டு உறுப்பினர்கள் ஆகிய பதவிகளில் போட்டியிட்ட அ.தி.மு.க., வேட்பாளர்கள் அனைவரும் வெற்றி பெற்றுள்ளனர்.
இது ஒருபுறம் இருக்க, 40 ஆண்டுகளாக, இவரது குடும்பத்தினரே, பெரும்பாக்கம் ஊராட்சியின் தலைவராக வெற்றி பெற்று வந்துள்ளனர்.
கடந்த 1965ம் ஆண்டு, ராஜசேகரின் தந்தை எத்திராஜ், இந்த ஊராட்சியின் தலைவராக இருந்துள்ளார். அவரை தொடர்ந்து, 1986- - 91 வரை, ராஜசேகர் தலைவராக இருந்துள்ளார்.
இதையடுத்து, 1991- - 96 வரை, உள்ளாட்சி தேர்தல் நடக்கவில்லை. மீண்டும் 1996ல் உள்ளாட்சி தேர்தல் நடந்தது. அப்போது, பெரும்பாக்கம் ஊராட்சியின் தலைவர் பதவி பெண்களுக்கான ஒதுக்கீட்டில் இடம் பெற்றது.
எனவே, இவரது மனைவி சரஸ்வதி, அத்தேர்தலில் வெற்றி பெற்றுள்ளார். இவர், 2007ம் ஆண்டு காலமாகும் வரை தலைவராக இருந்துள்ளார்.
இதையடுத்து நடந்த இடைத்தேர்தல், 2011ம் ஆண்டு நடந்த தேர்தல்களில், ராஜசேகரின் தம்பி ரங்கராஜனின் மனைவி சுஹாசினி என்பவர் வெற்றி பெற்றுள்ளார்.
தொடர்ந்து, 2016 - 2021ல் தேர்தல் நடக்கவில்லை. மீண்டும் 2021ல், அவரது தம்பி மனைவி சுஹாசினி வெற்றி பெற்று இப்போதும் தலைவராக உள்ளார்.

