/
உள்ளூர் செய்திகள்
/
காஞ்சிபுரம்
/
திருவண்ணாமலைக்கு சிறப்பு பஸ்கள் இயக்கப்படுமா?
/
திருவண்ணாமலைக்கு சிறப்பு பஸ்கள் இயக்கப்படுமா?
ADDED : ஏப் 24, 2024 06:59 AM
உத்திரமேரூர் மற்றும் சுற்றியுள்ள கிராமங்களில் மாதந்தோறும் பவுர்ணமியன்று, ஆயிரக்கணக்கான பக்தர்கள் இருந்து திருவண்ணாமலையில் கிரிவலத்திற்கு சென்று வருகின்றனர்.
ஆனால், உத்திரமேரூரில் இருந்து, திருவண்ணாமலைக்கு செல்ல நேரடி அரசு பேருந்து வசதி இல்லை. இதனால், உத்திரமேரூரில் இருந்து, வந்தவாசிக்கு சென்று, அங்கிருந்து வேறொரு பேருந்து வாயிலாக, திருவண்ணாமலை செல்ல வேண்டி உள்ளது.
இதனால், பயண நேரமும், பணமும் விரயமாகிறது. எனவே, மாதந்தோறும் பவுர்ணமியன்று, உத்திரமேரூரில் இருந்து, திருவண்ணாமலைக்கு சிறப்பு பேருந்து இயக்க, தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழகம், விழுப்புரம் கோட்டம், காஞ்சிபுரம் மண்டல அலுவலக நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
- தி.சே.அறிவழகன்,
திருப்புலிவனம்.

