/
உள்ளூர் செய்திகள்
/
காஞ்சிபுரம்
/
பறக்கும் படை வாகனங்களுக்கு கூடுதல் டீசல் வழங்கப்படுமா?
/
பறக்கும் படை வாகனங்களுக்கு கூடுதல் டீசல் வழங்கப்படுமா?
பறக்கும் படை வாகனங்களுக்கு கூடுதல் டீசல் வழங்கப்படுமா?
பறக்கும் படை வாகனங்களுக்கு கூடுதல் டீசல் வழங்கப்படுமா?
ADDED : ஏப் 09, 2024 11:22 PM
செங்கல்பட்டு, செங்கல்பட்டு மாவட்டத்தில், லோக்சபா தேர்தல் பணியில் ஈடுபட்டுள்ள பறக்கும் படை வாகனங்களுக்கு, கூடுதல் எரிபொருள் வழங்க வேண்டும் என, கோரிக்கை எழுந்துள்ளது.
லோக்சபா தேர்தலில் பறக்கும் படை, நிலையான கண்காணிப்பு குழுவினர் பயன்படுத்தும் ஒரு வாகனத்திற்கு, நாளொன்றுக்கு 10 லிட்டர் டீசல் வழங்க அனுமதி வழங்கி, தேர்தல் ஆணையம் உத்தரவிட்டது.
செங்கல்பட்டு மாவட்டத்தில், சோழிங்கநல்லுார், பல்லாவரம், தாம்பரம், செங்கல்பட்டு, திருப்போரூர், செய்யூர் -- தனி, மதுராந்தகம் -- தனி ஆகிய சட்டசபை தொகுதிகள் உள்ளன.
இந்த தொகுதிகளில் பறக்கும் படை, நிலையான கண்காணிப்பு குழுவினர் வாகன சோதனையில் ஈடுபட வாகனங்களை பயன்படுத்தி வருகின்றனர்.
இந்த வாகனங்களுக்கு, தினசரி 10 லிட்டர் டீசல் மட்டுமே வழங்க அனுமதிக்கப்பட்டுள்ளதால், தொலைதுாரங்களுக்கு செல்ல முடியாத நிலை உள்ளது.
கடந்த மார்ச் 20ம் தேதியில் இருந்து, கடந்த 7ம் தேதி வரை, மாவட்டத்தில் தேர்தல் நடத்தை விதிமுறைகளை மீறி வாகனங்களில் அனுமதியில்லாமல் எடுத்துச் சென்ற 8.20 கோடி ரூபாய், பறக்கும் படையினரால் பறிமுதல் செய்யப்பட்டது.
அதனால், தொலைதுாரத்தில் உள்ள பகுதிகளுக்கும் சிக்கலின்றி சென்று வரும் வகையில், கூடுதல் டீசல் வழங்க வேண்டும் என, பறக்கும் படை ஊழியர்கள் வலியுறுத்தி வருகின்றனர்.

