/
உள்ளூர் செய்திகள்
/
காஞ்சிபுரம்
/
அய்யப்பன் கோவில்களில் விஷு கனி பூஜை
/
அய்யப்பன் கோவில்களில் விஷு கனி பூஜை
ADDED : ஏப் 15, 2024 03:47 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
காஞ்சிபுரம் : காஞ்சிபுரம் அடுத்த, திம்மராஜம்பேட்டை ராமலிங்கேஸ்வரர் கோவில் வளாகத்தில், அய்யப்பனுக்கு தனி சன்னிதி உள்ளது.
இங்கு, தமிழ் புத்தாண்டு தினத்தன்று, கேரளாவில் இருக்கும் சபரிமலை அய்யப்பனுக்கு நடக்கும் விஷு கனி பூஜை போல, கனி அலங்காரம் இங்கும் நடக்கும்.
நேற்று, காலை, சிறப்பு அபிஷேகத்திற்கு பின், சந்தனகாப்பு மற்றும் கனி அலங்காரம் நடந்தன. அதேபோல, வாலாஜாபாத் அய்யப்பன் கோவில் உள்ளது. நேற்று நடந்த விஷு கனி பூஜை ஒட்டி, காலை 8:00 மணிக்கு சிறப்பு அபிஷேகம் மற்றும் ஆராதனை நடந்தது. அதை தொடர்ந்து, கனி அலங்காரம் நடந்தது.

