/
உள்ளூர் செய்திகள்
/
காஞ்சிபுரம்
/
தனியார் ஊழியர்கள் இருவர் எக்ஸ்பிரஸ் ரயில் மோதி பலி
/
தனியார் ஊழியர்கள் இருவர் எக்ஸ்பிரஸ் ரயில் மோதி பலி
தனியார் ஊழியர்கள் இருவர் எக்ஸ்பிரஸ் ரயில் மோதி பலி
தனியார் ஊழியர்கள் இருவர் எக்ஸ்பிரஸ் ரயில் மோதி பலி
ADDED : ஏப் 04, 2024 11:49 PM

சென்னை:தாம்பரம் அடுத்த குரோம்பேட்டை, நேரு நகர், படேல் தெருவைச் சேர்ந்தவர் பிரணவ், 23; ராயபுரத்திலுள்ள தனியார் நிறுவனத்தில் பணிபுரிந்தார்.
சிட்லப்பாக்கம், அசோக் நகர், மூன்றாவது பிரதான சாலையைச் சேர்ந்தவர் சதீஷ், 39; சென்னையிலுள்ள எச்.எப்.எஸ்., என்ற தனியார் வங்கியில் பணிபுரிந்து வந்தார்.
இருவரும் நேற்று முன்தினம் இரவு 10:30 மணிக்கு பணி முடிந்து, மின்சார ரயிலில் குரோம்பேட்டை ரயில் நிலையம் வந்து இறங்கினர். அங்கிருந்து வீட்டிற்கு செல்ல, இருவரும் சற்று இடைவெளியில் தண்டவாளம் வழியாக நடந்து சென்றனர்.
அப்போது, கோல்கட்டாவில் இருந்து தாம்பரம் நோக்கி வந்த, 'டின்சுக்கியா' என்ற விரைவு ரயில் மோதியது. இதில் இருவரும் படுகாயமடைந்து, சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தனர்.
போலீசார் விரைந்து வந்து இருவரின் உடல்களையும் கைப்பற்றி, பிரேத பரிசோதனைக்காக குரோம்பேட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பினர்.
இச்சம்பவம் தொடர்பாக, தாம்பரம் ரயில்வே போலீசார் வழக்கு பதிந்து, விசாரணை நடத்தி வருகின்றனர்.

