நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
உத்திரமேரூர்:உத்திரமேரூர் ஒன்றியம், வயலக்காவூர் கிராமத்தைச் சேர்ந்த 16 வயது மாணவி, நெய்யாடுவாக்கம் அரசு மேல்நிலைப் பள்ளியில் பிளஸ் 1 வகுப்பு படித்து வந்தார்.
இந்நிலையில், கடந்த 25ம் தேதி, வழக்கம் போல பள்ளிக்கு செல்வதாகக் கூறிச் சென்ற மாணவி, வீடு திரும்பவில்லை. இரு தினங்களாக உறவினர்களது வீடுகளில் தேடியும் மாணவி கிடைக்கவில்லை.
இதுகுறித்து மாணவியின் தாய் அளித்த புகாரின்படி, மாணவி குறித்து மாகரல் போலீசார் விசாரிக்கின்றனர்.

