/
உள்ளூர் செய்திகள்
/
காஞ்சிபுரம்
/
சர்வதீர்த்த குளத்தில் மாணவி சடலம் மீட்பு
/
சர்வதீர்த்த குளத்தில் மாணவி சடலம் மீட்பு
ADDED : ஏப் 08, 2024 04:18 AM
காஞ்சிபுரம், : பெரிய காஞ்சிபுரம், பஞ்சுப்பேட்டை, பெரிய தெருவைச் சேர்ந்த ஏழுமலையின் மகள் சுதா, 19; இவர், கீழம்பியில் உள்ள தனியார் கலை மற்றும் அறிவியல் கல்லுாரியில் முதலாம் ஆண்டு படித்து வந்தார்.
நேற்றுமுன்தினம், வீட்டியிலிருந்து வெளியே சென்ற அவர் வீடு திரும்பவில்லை. இதுகுறித்து, அவரது தந்தை ஏழுமலை, சிவகாஞ்சி போலீசில் புகார் அளித்தார். போலீசார் வழக்கு பதிந்து சுதாவை தேடி வந்தனர்.
இந்நிலையில், சர்வதீர்த்த குளத்தில், இளம் பெண் சடலம் ஒன்று மிதப்பதாக, சிவகாஞ்சி போலீசாருக்கு நேற்று காலை தகவல் கிடைத்தது. அதையடுத்து, போலீசார், குளத்திற்கு சென்று, இளம்பெண் சடலத்தை மீட்டு, விசாரணை நடத்தினர்.
விசாரணையில், குளத்தில் மீட்டெடுத்தது, பஞ்சுப்பேட்டை பெரியத்தெருவைச் சேர்ந்த ஏழுமலையின் மகள் சுதா, 19, என்பது தெரியவந்தது. சுதாவின் இறப்புக்கான காரணம் குறித்து, சிவகாஞ்சி போலீசார் விசாரிக்கின்றனர்.

