/
உள்ளூர் செய்திகள்
/
காஞ்சிபுரம்
/
சாலையோர தடுப்பு சேதம்; சீரமைப்பது எப்போது?
/
சாலையோர தடுப்பு சேதம்; சீரமைப்பது எப்போது?
ADDED : ஆக 09, 2024 09:59 PM

கூரம்: கூரம் கேட்டில் இருந்து பெரியகரும்பூர், புதுப்பாக்கம் வழியாக, கோவிந்தவாடி கிராமத்திற்கு செல்லும், 5 கி.மீ., துார சாலை, நெடுஞ்சாலை துறை கட்டுப்பாட்டில் உள்ளது.
இந்த சாலையில் எட்டுக்கும் மேற்பட்ட இடங்களில், அபாயகரமான வளைவுகள் உள்ளன.
மேலும், ஐந்திற்கும் மேற்பட்ட இடங்களில், தாழ்வான பள்ளங்கள்உள்ளன.
இதுபோன்ற இடங்க ளில், வாகன ஓட்டிகள் கவிழ்ந்து விடக்கூடாது என, நெடுஞ்சாலை துறையினர் இரும்பிலான தடுப்புச்சுவர் அமைத்தனர். ஆனால், இந்த தடுப்புச்சுவர் சரிந்து விழுந்துள்ளது. இதை கண்காணிக்க வேண்டிய நெடுஞ்சாலை துறையினர் அலட்சியமாக உள்ளதாக, குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
மேலும், வாகனங்கள் நிலை தடுமாறி கவிழும் வாய்ப்பு உள்ளதால், வாகன ஓட்டிகள் அச்சத்தில் சென்று வருகின்றனர்.
எனவே, கூரம் - கோவிந்தவாடி சாலையில், சரிந்து கிடக்கும் சாலையோர இரும்பு தடுப்பை சீரமைக்க,சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என, வாகனஓட்டிகள் கோரிக்கைவிடுத்துள்ளனர்.

