/
உள்ளூர் செய்திகள்
/
காஞ்சிபுரம்
/
தாழ்வாக செல்லும் மின்கம்பியால் திருமால்பூரில் விபத்து அபாயம்
/
தாழ்வாக செல்லும் மின்கம்பியால் திருமால்பூரில் விபத்து அபாயம்
தாழ்வாக செல்லும் மின்கம்பியால் திருமால்பூரில் விபத்து அபாயம்
தாழ்வாக செல்லும் மின்கம்பியால் திருமால்பூரில் விபத்து அபாயம்
ADDED : ஆக 18, 2024 11:50 PM

காஞ்சிபுரம் : ராணிப்பேட்டை மாவட்டம், நெமிலி ஒன்றியத்தில், திருமால்பூர் கிராமம் உள்ளது. இங்கு, அஞ்சானாட்சி சமேத, மணிகண்டீஸ்வரர் கோவில் உள்ளது. இந்த கோவிலுக்கு, திருமால்பூர், நெல்வாய், கண்டிகை உள்ளிட்ட பல்வேறு கிராமங்களைச் சேர்ந்த பக்தர்கள் வருகை தருகின்றனர்.
இக்கோவில் தெப்பக்குளம் அருகே செல்லும் மின்கம்பி தாழ்வாக செல்கிறது. குறிப்பாக, மின் கம்பி அருகே, ஒருவர் கை துாக்கினால், எட்டும் தொலைவில், தாழ்வாக தொங்கிக் கொண்டிருக்கிறது.
இதனால், திருமால்பூர் மணிகண்டீஸ்வரர் கோவில் அருகே, மின் விபத்து ஏற்படும் அபாயம் உள்ளது.
எனவே, சம்பந்தப்பட்ட மின்வாரிய அதிகாரிகள் முறையாக மின் வழித்தடத்தை ஆய்வு செய்து, தாழ்வாக தொங்கும் மின் கம்பியை இழுத்து கட்ட வேண்டும் என, கோரிக்கை எழுந்துள்ளது.