/
உள்ளூர் செய்திகள்
/
காஞ்சிபுரம்
/
2,000 வளர்ப்பு நாய்களுக்கு சென்னையில் பதிவு உரிமம்
/
2,000 வளர்ப்பு நாய்களுக்கு சென்னையில் பதிவு உரிமம்
2,000 வளர்ப்பு நாய்களுக்கு சென்னையில் பதிவு உரிமம்
2,000 வளர்ப்பு நாய்களுக்கு சென்னையில் பதிவு உரிமம்
ADDED : மே 18, 2024 11:22 PM
சென்னை: ''சென்னையில், 2,000 நாய்களுக்கு பதிவு உரிமம் வழங்கப்பட்டுள்ளது,'' என, மாநகராட்சி கால்நடை மருத்துவ அலுவலர் கமல் உசேன் கூறினார்.
சென்னை, ஆயிரம் விளக்கு பகுதி பூங்காவில் விளையாடி கொண்டிருந்த ஐந்து வயது சிறுமி சுரக் ஷாவை, புகழேந்தி என்பவரின் இரண்டு வளர்ப்பு நாய்கள் கடித்தன.
இதில், பலத்த காயமடைந்த சிறுமி அப்பல்லோ மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். இச்சம்பவத்தை தொடர்ந்து, சென்னை மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் நாய்கள் வளர்ப்பதற்கு பதிவு உரிமம் பெறுவது கட்டாயமாக்கப்பட்டு உள்ளது.
அவ்வாறு பதிவு பெறாமல் வெளியே செல்லப்பிராணிகள் அழைத்து வந்தால் நடவடிக்கை எடுக்கப்படும் என, எச்சரித்தது.
இதனால், செல்லப்பிராணிகள் வளர்ப்போர் ஒரே நேரத்தில் மாநகராட்சி இணையதளத்தில் விண்ணப்பிக்க முயன்றனர். இதனால், ஒரு நாள் முழுதும் மாநகராட்சியின் இணையதளம் முடங்கியது.
மீண்டும் செயல்பட துவங்கியதில் இருந்து, செல்லப்பிராணிகள் வளர்ப்போர் விண்ணப்பித்து வருகின்றனர்.
இதுகுறித்து, மாநகராட்சி கால்நடை மருத்துவ அலுவலர் கமல் உசேன் கூறியதாவது:
சென்னை மாநகராட்சி இணையதளத்தில், 10,000க்கும் மேற்பட்ட விண்ணப்பங்கள் வந்தன. அதில், புறநகர் பகுதிகளில் வந்ததால், 4,000க்கும் மேற்பட்ட விண்ணப்பங்கள் நிராகரிக்கப்பட்டு உள்ளன.
தற்போது, 2,000 செல்லப்பிராணிகளுக்கு பதிவு உரிமம் வழங்கப்பட்டு உள்ளது. அதேபோல், 2,700க்கும் மேற்பட்ட விண்ணப்பங்கள் பரிசீலனையில் உள்ளன.
பொதுமக்கள் உரிய ஆவணங்களுடன் பதிவு செய்யும்பட்சத்தில், குறைந்தது மூன்று நாட்களுக்குள் அவர்களுக்கான பதிவு உரிமம் வழங்கப்படும்.
இவ்வாறு அவர் கூறினார்.

