/
உள்ளூர் செய்திகள்
/
காஞ்சிபுரம்
/
சாலையில் ஓடும் மருத்துவ கழிவு ஸ்ரீபெரும்புதுாரில் தொற்று அபாயம்
/
சாலையில் ஓடும் மருத்துவ கழிவு ஸ்ரீபெரும்புதுாரில் தொற்று அபாயம்
சாலையில் ஓடும் மருத்துவ கழிவு ஸ்ரீபெரும்புதுாரில் தொற்று அபாயம்
சாலையில் ஓடும் மருத்துவ கழிவு ஸ்ரீபெரும்புதுாரில் தொற்று அபாயம்
ADDED : ஜூலை 12, 2024 10:57 PM

ஸ்ரீபெரும்புதுார்:ஸ்ரீபெரும்புதுாரில் தனியார் மருத்துவமனையில் இருந்து வெளியேறும் கழிவுநீர் சாலையில் வழிந்தோடுவதால், அப்பகுதியில் சுகாதார சீர்கேடு ஏற்பட்டு, நோய் தொற்று பரவும் அச்சத்தில் அப்பகுதியினர் உள்ளனர்.
ஸ்ரீபெரும்புதுார் பேரூராட்சி, 9வது வார்டுக்கு உட்பட்ட, ராமானுஜர் நகரில் 50க்கும் மேற்பட்ட வீடுகள், தனியார் மருத்துவமனை, மருந்தகம் உட்பட ஏராளமான சிறு குறு வணிக நிறுவனங்கள் உள்ளன.
ராமானுஜர் நகர் சாலை வழியே தினமும் ஏராளமான வாகனங்கள் சென்று வருகின்றனர். இந்த நிலையில், இங்குள்ள தனியார் மருத்துமனையில் இருந்து மருத்துவ கழிவுநீர் வெளியேறி, சாலையில் வழிந்தோடுகிறது. இதனால், அப்பகுதி துர்நாற்றம் வீசிகிறது.
மேலும், கழிவுநீரை மிதித்தபடியே நடந்து செல்லும் அப்பகுதியினர், நோய் தொற்று பரவும் அச்சத்தில் சென்று வருகின்றனர்.
எனவே, மருத்துவ கழிவுநீரை சாலையில் வெளியேற்றும் மருத்துவமனையின் மீது, சம்பந்தப்பட்ட அதிகாரிகள் கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என, அப்பகுதியினர் கோரிக்கை விடுத்துள்ளனர்.