/
உள்ளூர் செய்திகள்
/
காஞ்சிபுரம்
/
வளைவில் உயரமான சிறுபாலம்; அச்சத்தில் வாகன ஓட்டிகள்
/
வளைவில் உயரமான சிறுபாலம்; அச்சத்தில் வாகன ஓட்டிகள்
வளைவில் உயரமான சிறுபாலம்; அச்சத்தில் வாகன ஓட்டிகள்
வளைவில் உயரமான சிறுபாலம்; அச்சத்தில் வாகன ஓட்டிகள்
ADDED : ஆக 09, 2024 10:31 PM

காஞ்சிபுரம்: காஞ்சிபுரம் - செங்கல்பட்டு சாலை, பட்டாள தெருசாலை வளைவில் மழைநீர் வெளியேறும் வகையில், நெடுஞ்சாலைத் துறை சார்பில், சாலையின் குறுக்கே, மழைநீர் செல்லும் வகையில்சிறுபால கட்டுமானப் பணி நடந்து வருகிறது.
சாலையின் தரைமட்டத்தைவிட 2 அடி உயரத்தில் சிறுபாலம் அமைப்பதால், அருகில் உள்ள வீடுகளில் இருந்து மழைநீர், சிறு பாலம் வழியாக வெளியேற வழியில்லாமல்சிக்கல் ஏற்படும்.
சாலை வளைவில் உயர மாக சிறுபாலம் அமைப்பதால், வாகன ஓட்டிகள், சாலை வளைவில் திரும்பும்போது, அடிக்கடி விபத்தில் சிக்கும் சூழல் உள்ளது.
எனவே, நெடுஞ் சாலைத்துறையினர், சாலை மட்டத்தில் பாலத்தை கட்ட வேண்டும் என, கோரிக்கை எழுந்தது.
இதுகுறித்து காஞ்சிபுரம் நெடுஞ்சாலைத்துறை அதிகாரி கூறியதாவது:
நிரந்தர வெள்ளத்தடுப்பு சீரமைப்பு திட்டத்தின் கீழ், பட்டாள தெருவில், மழைநீர் தடையின்றி செல்லும் வகையில், 50 லட்சம் ரூபாய் செலவில், 2 மீட்டர் உயரம், 2 மீட்டர் அகலம், 15 மீட்டர் நீளத்திற்கு சிறுபால கட்டுமான பணி நடந்து வருகிறது.
சாலை மட்டத்தைவிட சிறுபாலம் உயரமாக இருந்தாலும், அப்பகுதியில் மழைநீர் தடையின்றி செல்லும் வகையில் அமைக்கப்பட்டுள்ளது. இதன் வாயிலாக அப்பகுதியில் மழைநீர் தேங்க வாய்ப்பு இல்லை.
மேலும், சாலை வளைவு என்பதால், விபத்தை தவிர்க்கும் வகையில், சிறுபாலத்திற்கு அணுகு சாலையும் அமைக்கப்பட உள்ளது. சிறுபாலம் கட்டுமான பணி இம்மாதத்திற்குள் முடிக்கப்படும்.
இவ்வாறு கூறினார்.

