/
உள்ளூர் செய்திகள்
/
காஞ்சிபுரம்
/
கூழாங்கல்சேரி சாலையில் தாழ்வாக செல்லும் மின் ஒயர்
/
கூழாங்கல்சேரி சாலையில் தாழ்வாக செல்லும் மின் ஒயர்
ADDED : ஆக 27, 2024 01:00 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
வண்டலுார் --- வாலாஜா பாத் நெடுஞ்சாலையில், செரப்பனஞ்சேரி - கூழாங்கல்சேரி கிராமம் செல்லும் பிராதன சாலையில், தினமும் ஏராளமான வாகனங்கள் சென்று வருகின்றன.
இந்த சாலையோரம் மின் கம்பங்களின் வழியே செல்லும் மின் ஒயர், மிகவும்தாழ்வாக உள்ளது.இதனால், இவ்வழியாக செல்லும் பள்ளி பேருந்து, எதிர்பாராத விதமாக மின் ஒயரில் உரசும் போது, பெரும் விபத்து ஏற்படும் சூழல் உள்ளது.
எனவே, தாழ்வாக செல்லும் மின் ஒயரை, உயர்த்தி அமைக்க மின்வாரிய உயர் அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
-சு.செந்தில்நாதன், கூழாங்கல்சேரி.

