ADDED : ஆக 30, 2024 01:29 AM
காஞ்சிபுரம்:காஞ்சிபுரம் மேட்டு தெருவில், காஞ்சி ஆரிய வைசிய சமாஜத்திற்குஉட்பட்ட நகரீஸ்வரர் கோவில் உள்ளது.
இக்கோவிலில், ராஜகோபுரம் மூலவர் விமானம் மற்றும் பரிவார மூர்த்திகள் ஆகியவை புனரமைக்கப்பட்டு மஹா கும்பாபிஷேகம் நடத்த, ஹிந்து சமய அறநிலையத் துறையினர், அறங்காவலர் குழுவினர் முடிவு செய்தனர்.
அதன்படி, திருப்பணி துவக்குவதற்கான முதற்கட்ட பணியான பாலாலயத்திற்கான மஹா கணபதி ஹோமம், சிவாச்சாரியார் காமேஸ்வர குருக்கள் மற்றும் ஆதித்யன் சிவம் ஆகியோர் தலைமையில், நேற்று, காலை 9:00 மணிக்கு துவங்கியது.
தொடர்ந்து நவக்கிரஹ ஹோமம், யாகசாலை அமைப்பும், மாலை 5:00 மணிக்கு வாஸ்து சாந்தி, கலாகர்ஷணம், நாடி சந்தானம், தத்வார்ச்சன முதல்கால யாக பூஜை, மஹா பூர்ணாஹூதி உள்ளிட்டவை நடந்தன.
இன்று காலை, பாலாலயம் நடக்கிறது. பாலாலய கும்பாபிஷேகத்திற்கான ஏற்பாட்டை ஹிந்து சமய அறநிலையத்துறையினர், கோவில் அறங்காவலர் குழுவினர் செய்துள்ளனர்.

