/
உள்ளூர் செய்திகள்
/
காஞ்சிபுரம்
/
தொழிற்சாலையில் ஊழியர் வலிப்பு ஏற்பட்டு பலி
/
தொழிற்சாலையில் ஊழியர் வலிப்பு ஏற்பட்டு பலி
ADDED : மார் 26, 2024 10:53 PM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
குன்றத்துார்:கடலுார் மாவட்டம் நெய்வேலி பகுதியை சேர்ந்தவர் வினோத்குமார், 21. இவர் தாம்பரம் அருகே படப்பை அருகே தங்கி, படப்பை அடுத்த வெள்ளேரிதாங்கல் பகுதியில் உள்ள தனியார் தொழிற்சாலையில் பணியாற்றி வந்தார்.
இந்நிலையில், பணியில் இருந்தபோது தொழிற்சாலையில் வலிப்பு ஏற்பட்டதாக கூறப்படுகிறது. தொழிற்சாலை நிர்வாகத்தினர் வினோத்குமாரை குரோம்பேட்டை அரசு மருத்துவமனைக்கு அழைத்து சென்றனர்.
அங்கு பரிசோதனை செய்த மருத்துவர்கள் அவர் இறந்து விட்டதாக தெரிவித்தனர். வினோத்குமார் இறப்பில் சந்தேகம் இருப்பதாக அவரது உறவினர்கள் புகார் அளித்ததையடுத்து மணிமங்கலம் போலீசார் இந்த சம்பவம் குறித்து விசாரிக்கின்றனர்.

